இது திருமணம் முடிந்த பெண்களுக்கு மட்டும்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

திருமணம் முடிந்து ஒரு கும்பத்திற்கு தலைவி பொறுப்பை ஏற்கப் போகும் பெண்கள் அனைவரும் சில பழக்கங்களை சரியாக பின்பற்றி வந்தால் வாழ்க்கை சிறப்பாக அமைவதுடன், நிறைய அதிர்ஷ்டங்களையும் பெறலாம்.

திருமணம் முடிந்த பெண்கள் பின்பற்ற வேண்டியவை?
  • பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலையில் படுக்கையை விட்டு எழுந்து, வீட்டுக் கதவைத் திறக்கும் போது, மகாலட்சுமியே வருக என்று 3 முறைகள் கூற வேண்டும்.
  • காலை 4-6 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இதனால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.
  • வீட்டில் காலை மற்றும் மாலையில் இருட்டுவதற்கு முன்பாக விளக்கேற்ற வேண்டும். ஆனால் மாலையில் விளக்கு ஏற்றிய உடன் வெளியே செல்லக் கூடாது.
  • வீட்டில் விளக்கு ஏற்றிய பின் தலை சீவுதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்ற செயல்களை செய்யக் கூடாது.
  • விளக்கு வைத்த பின் வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே வீசக் கூடாது. பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்கவோ அல்லது கொடுக்கவோ கூடாது.
  • திருமணம் முடிந்த பெண்கள் தங்களின் நெற்றியில் எப்போதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்கு முன் குடும்பத் தலைவி முதலில் தனது நெற்றியில் குங்குமம் இட்டு அதன் பின் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
  • பால் காய்ச்சினால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்கலாம். அதனால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
  • வெள்ளிக் கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது ஆகியவை செய்யக் கூடாது. அது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
  • செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆனால் பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*