ஓவியா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

oviya

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கே சென்றிருப்பவர் நடிகை ஓவியா. இதன் மூலம் ஓவியா புரட்சி படை, ஓவியா ஆர்மி மற்றும் அகில இந்திய ஓவியா பேரவை தொடங்கும் அளவுக்கு சென்றுள்ளது. இந்த ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் ஓவியா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயம் ஒன்று காத்திருக்கிறது. அதாவது கடந்த வாரம் வெளியே செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். தனக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி வெளியே செல்ல வேண்டும் என்று அடம்பிடித்துள்ளார்.

ஓவியா தொடர்ந்து வெளியே செல்ல வேண்டும் என்று அடம்பிடித்து வருவதால் அவரை வெளியே அனுப்ப பிக்பாஸ் முடிவு செய்துள்ளதாம். இதற்காகத்தான் இந்த வாரம் நாமினேட் லிஸ்டிலும் கொண்டு வந்துள்ளார்களாம்.

மேலும் அவருக்கு பதில் ஒரு வலுவான போட்டியாளராக பிந்து மாதவியை கொண்டு வந்துள்ளார்கள் எனவும் கூறப்படுகிறது. பிக்பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியே செல்ல நினைத்தாலும் ரசிகர்கள் அனுப்ப மாட்டார்கள். நேற்று முதலே ஓட்டுகளை போட துவங்கி விட்டனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit