ஆரவ் – ஓவியா திருமணம் உறுதியானது!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா எந்த அளவுக்கு புகழ் பெற்றாரோ, அதே அளவுக்கு ஆரவுடனான ரொமான்ஸ் காட்சிகளும் மிகப்பிரபலம். அவர் ஆரவை ஓவியா விரட்டி விரட்டி காதல் செய்கிறார். இது விஜய் டிவியால் சொல்லிக் கொடுக்கப்பட்டு செய்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் இது நிஜ காதலர்களின் செயல்களை போலவே உள்ளது.

நேற்று கூட ஆரவை பார்த்து ஓவியா காதல் வராதா.. காதல் வராதா.. என் மேல் என் மேல் காதல் வராதா என்று பாடினார். மேலும் ஆரவை திருமணம் செய்து கொள்கிறீகளா என்று கேட்டதற்கு கூட அதற்கு ஆரவ்தான் பதில் சொல்ல வேண்டும் என்று வெட்கத்துடன் சொல்கிறார்.

மேலும் ஓவியா – ஆரவ் காதலுக்கு சக போட்டியாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சினேகன் கூறும்போது கூட ஓவியாவை நீ திருமணம் செய்தால் உனக்கு உண்மையாக இருப்பாள் என்று கூறுகிறார். அதே போல சக்தி கூட ஓவியா பார்ப்பதற்குதான் ஒரு மாதிரி இருப்பார் காதல் என்று வந்தல் உண்மையாக இருப்பார் என்றெல்லாம் கூறுகிறார்.

திரையில் மட்டுமே ஓவியாவை எதிரியாக பார்ப்பவர்கள் நிஜத்தில் ஓவியாவை நேசிக்கின்றனர் என்பது மட்டும் உண்மை. எனவே ஓவியா – ஆரவ் காதல் மட்டும் நாளுக்கு நாள் வலுவடைந்து வலுவடைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த காதல் விரைவில் திருமணத்தில் முடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி நடக்க வாய்ப்பிருந்தால் அதனை பிக்பாஸ் போட்டியாளர்களே நடத்தி வைப்பார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*