தாயைக் கெடுத்து..அவரது 15 வயது சிறுமியையும் நாசம் செய்த ஒரு காக்கி கருப்பு ஆடு!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kisu

வேலியே பயிரை மேய்ந்த கதை தெரியுமா..? அப்படிதான் ஒரு காவல்துறையின் கருப்பு ஆடு..வேலியை மேய்ந்து ஒரு குடும்ப பெண்ணையும்,அவரது பதினைந்தே வயது ஆன சிறுமியையும் நாசம் செய்துள்ளது. படிங்க..!
பெங்களூரு துமகூரு ஜெயநகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டுவாக பணியாற்றி வருபவர் மோகன்.
இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு உதவி செய்ய அவை அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 6 ஆண்டுகளாக இருவருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது..

இதனால் அப் பெண்ணின் கணவர் அப்பெண்ணை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
இதனால் அந்த பெண் 15 வயது நிரம்பிய தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இதற்கிடையே, மோகன் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில்,கள்ளக்காதலி இல்லாத நேரத்தில் கள்ளக்காதலி மகளான 15 வயது சிறுமியை கடந்த 4 ஆண்டுகளாக போலீஸ் ஏட்டு மோகன் மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சம்பவம் குறித்து துமகூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திவ்யா கோபிநாத்திடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். அப்போது, சிறுமியை மோகன், பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அவருடைய உத்தரவின்பேரில் மோகன் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, நேற்று போலீஸ் சூப்பிரண்டு திவ்யா கோபிநாத் தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit