இன்னும் நாலு தம்பி, தங்கை வேண்டும்: அடம் பிடிக்கும் பிரபல வீரரின் மகன்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

dinaldo

இன்னும் தனக்கு நான்கு தம்பி, தங்கை வேண்டும் என்று பிரபல காலபந்து வீரரான கிறிஸ்டியன் ரோனால்டோவின் மகன் கூறியுள்ளார்.

கால்பந்து வீரர் ரொனால்டோ இன்னும் திருமணம் புரிந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.

முதல் மகன் கிறிஸ்டியானோ ஜுனியர் அவரின் காதலிக்குப் பிறந்தவர். ஆனால் கிறிஸ்டியானோ ஜூனியரின் தாயார் பெயர் வெளியிடப்படவில்லை.

இதைத் தொடந்து ரொனால்டோவுக்கு அண்மையில் இரட்டை குழந்தைகள் பிறந்தது. ஆனால் குழந்தை பெற்றெடுத்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த வாடகை தாய்.

ரொனால்டோ போர்ச்சுகல் மற்றும் ரியல்மாட்ரிட் அணிகளுக்காக விளையாடும் போது, ஏழாம் எண் ஜெர்சி அணிந்துதான் விளையாடுவார். அது அவரின் அதிர்ஷ்ட எண்.

இந்நிலையில் மூத்த மகனான கிறிஸ்டியானோ, ஜெர்சி எண்ணுக்குப் பொருத்தமாக வீட்டில் 7 சகோதர- சகோதரிகள் வேண்டுமென்று ஆசைப்படுவதாகவும், அதனால், மகனின் ஆசையைப் பூர்த்தி செய்யும்விதத்தில் தன் குழந்தைகளின் எண்ணிக்கையை ஏழாக உயர்த்த ரொனால்டோ திட்டமிட்டுள்ளாதாக கூறப்படுகிறது.

ரொனால்டோவின் தற்போதையை காதலி ஜார்ஜினியா ரோட்ரிகஸ் கர்ப்பமாகியிருக்கிறார். விரைவில் ரொனால்டோவின் வீட்டில் 4வது குழந்தை தவழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ரொனால்டோவின் மூத்த மகன் கிறிஸ்டியானோ எனக்குமொத்தம் ஏழு தம்பி, தங்கை வேண்டும் என்று நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit