வங்கதேச அணியில் இணையும் இலங்கையின் பிரபல பந்து வீச்சாளர்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வங்கதேச கிரிக்கட் அணியின் வேக பந்து பயிற்சியாளர் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர் சம்பக ராமநாயக்கவை நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜிம்பாப்வே அணியுடன் இடம்பெற்ற போட்டிகளுக்கு பிறகு சம்பக ராமநாயக்க, இலங்கை அணியின் வேக பந்து பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்து, சமிந்தவாஸ் இலங்கை அணியின் வேக பந்து பயிற்சியாளர் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், வங்கதேச கிரிக்கட் அணியின் வேக பந்து பயிற்சியாளர் பதவிக்காக சம்பக ராமநாயக்கவிடம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக வங்கதேச கிரிக்கட் நிர்வாக ஆணையத்தின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் சுழற்பந்து வீச்சாளர் பதவிக்காக அவுஸ்திரேலியா ஜாம்பவான் ஸ்டுவர்ட் மெக்கிலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நஸ்முல் ஹசன் கூறியுள்ளார்.

இதேவேளை வங்கதேச அணியின் பிரதான பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்திக் ஹதுருசிங்க செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*