நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் லண்டனில் நடைபெற்ற மாபெரும் விளையாட்டு விழா 2017 – (படங்கள் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் மூன்றாவது முறையாக லண்டன் மாநகரில் நேற்றைய தினம் (30.07.2017) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 வரை MODERN PARK, LONDON ROAD SM4 5HE எனும் இடத்தில் சிறப்பாக நடைபெற்றது

நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் ஞாபகார்த்தமாக இவ்விளையாட்டு போட்டி 3வது முறையாக விளையாட்டால் ஒன்றிணைவோம் என்ற கருப்பொருளில் நடைபெற்றுள்ளது. நிகழ்வில் அணிநடை மரியாதை மங்கள விளக்கேற்றல் பிரித்தானிய தேசியக்கொடியேற்றல் தமிழீழ தேசியக்கொடியேற்றல் அகவணக்கம் தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்பு நடனம் போன்ற ஆரம்ப நிகழ்வுகளுடன் விளையாட்டு விழா இனிதே ஆரம்பமாகியது

தொடர்ந்து வரவேற்புரையினை நாடு கடந்த தமிழீழ அரசின் விளையாட்டு துறை மற்றும் சமூக நலன் பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் நிகழ்த்தினார் அதனை தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையினை பிரித்தானியாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் shob mcdonadls அவர்கள் நிகழ்த்தியிருந்தார்கள்.

அதனைத்தொடர்ந்து சகல விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகின. தாயக விளையாட்டுக்களான கிளித்தட்டு உட்பட கால்பந்து மென்பந்து வலைப்பந்தாட்டம் போன்ற பெரு விளையாட்டுக்களும் மற்றும் மெய்வல்லுனர் போட்டிகளும் இடம்பெற்றன. மழை வந்து சற்று இடையூறு விளைவித்திருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாது நிறைவான தமிழ் மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

tamilalam-6

tamilalam-5

tamilalam-4

tamilalam-3

tamilalam-2

tamilalam-1

1

விளையாட்டு நடைபெற்றுக்கொண்டுந்தபோது இடையிடையில் ஒழுங்கமைக்கப்பட்ட மேடையில் தாயகப்பாடல்களும் , நாடகமும் தாயக கலைஞர்களினால் பிரசவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கும் மற்றும் கழகங்களுக்கும் வெற்றிக்கிண்ணம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

அத்துடன் தாய உணவுப்பொருட்களை தாங்கிய வியாபார நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தது விளையாட்டு விழாக்கு வந்திருந்த அனைவர் மனதிலும் ஒரு புன்னகையை ஏற்படுத்தியிருந்தது.

இவ் விளையாட்டு விழாவானது புலத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்குடனும் நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*