கிறங்கி அழைத்த அழகிய குடும்பப் பெண் : போனான்..அங்கு?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மாணவப் பருவம் என்பது மிக ஜாக்கிரதையாக கடக்க வேண்டிய ஒரு பருவம் என்பார்கள். காரணம் அப்பருவத்தில் தான் ஒருவன் தனது மொத்த வாழ்நாளையும் தீர்மானிக்கும் பருவம்.

இதில் எங்கு சறுக்கினாலும் மொத்த வாழ்க்கையும் கேள்விக்குறி ஆகி விடும்.

அவன் பெயர் புவன். ப்ளஸ்டூ படிப்பவன். அழகாய் இருப்பான். மாலை வேளைகளில் தனது நண்பனின் செல் போன் கடையில் வேலை பார்ப்பான். அந்த கடைக்கு வந்தாள். முப்பது வயதிருக்கும். மிக அழகானவள். பெயர் ஆர்த்தி.

வசதியான குடும்பம். தனது போனுக்கு சின்ன பிரச்சனை என்று அங்கு சர்வீஸ் பண்ண கொடுத்தாள். புவன் அதைச் சரி செய்தான்.

அவனது நம்பரை ஆர்த்தி வாங்கிச் சென்றாள். மறுநாள் புவனுக்கு போன் செய்தாள். அவன் போன் ரெடி என்றான்.

கொஞ்சும் குரலில் என் வீட்டிற்கு வந்து டெலிவரி கொடுக்க முடியுமா என்று கேட்டு முகவரி கொடுத்தாள்.புவன் கொண்டு சென்றான். அவளின் ஆடம்பர வீட்டைப் பார்த்து மிரண்டு போனான். அவள் காபி கொடுத்து உபசரித்தாள். பணம் கொடுத்து போனை வாங்கினாள்.

அன்று இரவே போன் செய்தாள் நன்றி கூறினாள். போன் பேச்சுகள் இரவு பகலாக தொடர வீட்டிற்கும் அடிக்கடி அவனை வரவைத்தாள்.

அந்த அப்பாவி மாணவனை தனது காம வலையில் வீழ்த்தினாள். இது தொடர, அவளின் கணவனுக்கு விஷயம் போனது. மனைவியை அடித்து நொறுக்கினான். ஆனாலும் அவள் மாணவனோடு கள்ளக் காதலைத் தொடர்ந்தாள்.

மீண்டும் கணவனுக்கு தெரிய, மாணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தான் கணவன். கூட நண்பர்களை சேர்த்துக் கொண்டான்.

மனைவியை அடித்து புவனுக்கு போன் செய்து வர வை என்றான் கணவன். நண்பர்களும் மனைவியை மிரட்டினார்கள்.

வேறு வழி இன்றி அவனுக்கு போன் செய்தாள் ஆர்த்தி. யாரும் இல்லை வீட்டிற்கு வாடா என்றாள். புவனும் ஆசை ஆசையாய் ஓடி வந்தான்.

அவள் மட்டும் வீங்கிய முகத்துடன் ஹாலில் அமர்ந்திருந்தாள். புவனுக்கு எதோ பொறி தட்டியது. நழுவத் தயாரானான். கதவுகள் பூட்டப் பட்டது.

கணவனும், நண்பர்களும் சூழ்ந்தார்கள். மரண அடி. ரத்தம் சொட்ட கீழே சரிந்தான் புவன். டெம்போ வேனில் தூக்கிப் போட்டுக்கொண்டு கிளம்பினார்கள்.

அதன் பின் அவன் சடலம் எரிக்கப்பட்ட நிலையில் பத்து நாட்களுக்கு பின் பட்டிப்புலம் சவுக்குத் தோப்பில் கண்டெடுக்கப் பட்டது.

ஒரு மாத தேடலில் போலீஸ் இறந்தது யார் என்றும், கொலை செய்தது யார் என்றும் கண்டு பிடித்தார்கள்.

ஆர்த்தி அழுதபடி கணவனைக் காட்டிக் கொடுத்தாள். கணவனும், நண்பர்களும் ஜெயிலுக்குப் போனார்கள்.

கள்ளக் காதலில் இறந்த புவன் வீட்டிற்கு ஒரே பையன் வறுமையான குடும்பம் என்பது கூடுதல் சோகம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*