இந்த காமெடி நடிகர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அறுபது வயதை நெருங்கி விட்டார் நகைச்சுவை நடிகர் சார்லி. இவரின் அப்பா ஒரு ஆசிரியர். அதுவும் மிகவும் கண்டிப்பான ஆசிரியர்.

கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளியில் 1980களின் கால கட்டத்தில் தங்கசாமி ஆசிரியர் என்றால் மாணவர்கள் நடுங்குவார்கள்.

“கல்வி அப்புறம் முதலில் ஒழுங்கைக் கற்றுக் கொண்டு வெளியே போ” என்பது அந்த நல்லாசிரியரின் தாரக மந்திரம். அவரின் மகன் தான் நடிகர் சார்லி.

ஆயிரம் கெட்ட பழக்கங்கள் நிறைந்த திரையுலகில் மிக கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டவர் இவர்.

இவரைப் பற்றி ஒரு சிறு கிசுகிசுவோ, மோசமான நடிகன் என்பதோ, பண விஷயத்தில் கறார் என்பது போன்ற எந்த அவப்பெயரும் கிடையாது.

கூடவே நல்ல புத்தகங்களை தேடித் தேடி வாங்கி வாசிக்கும் பழக்கம் சார்லிக்கு உண்டு.

சார்லியிடம் இன்னொரு பழக்கம் சத்தமே இல்லாமல் ஏழை எளிய மாணவர்களுக்கு அவர்களின் உண்மை நிலை அறிந்து உதவுவது.

“என் அப்பா போல ஆசிரியராக இருந்திருக்க வேண்டியவன். ஆனால் நடிகனாகி விட்டேன்.

“பாடம் நடத்தினால் தான் ஆசிரியர் என்பது இல்லை. படிக்கச் உதவினாலும் ஆசிரியர் தான்” என்று கூறி அசரடிப்பார்.

இவரின் இல்லத்தில் பல நூறு அரியவகை புத்தகங்கள் உண்டு. உலக இலக்கியங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர் சார்லி.

உலக சினிமாக்களும் இவருக்கு அத்துப்படி.! இப்போது அப்பா வேடத்திற்கு ஆயத்தமாகிவிட்டார் என்பதால் மீண்டும் சினிமாவில் பிசியாகிக் கொண்டிருக்கிறார்.

“எதோ ஒரு நல்ல வழியில் பணம் வரணும். ஆனா அந்தப் பணத்தை உண்ண முடியாது. ஆனால் உதவ முடியும்” என்பது நடிகர் சார்லியில் கொள்கை. குறிப்பாக கல்விக்கு உதவுவது இவரின் உயர்ந்த கொள்கை

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*