தனது கருத்துக்களை தைரியமாக சொல்லும் இலங்கை வீரர்: இவர் தான் உள்ளூர் ஹீரோ

பிறப்பு : - இறப்பு :

இலங்கை அணியில் தனது கருத்துக்களை யாருக்கும் பயமில்லாமல் தைரியமாக செல்லும் வீரர் மலிங்கா தான் என்று ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 600 ஓட்டங்களும், இலங்கை அணி 291 ஓட்டங்களும் எடுத்தது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் எடுத்து 498 ஓட்டங்கள் என்ற வலுவான முன்னிலையில் உள்ளது.

இன்னும் இரண்டு நாட்கள் மீதம் உள்ள நிலையில், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இந்நிலையில் இப்போட்டியை பார்க்க ஏராளமான மலிங்கா ரசிகர்கள் மைதானத்திற்கு வருகின்றனர்.

அவர்கள் தங்கள் தலைகளில் மலிங்காவின் ஹேர் ஸ்டைல் போல விக் அணிந்து வருகின்றனர். அதில் ரசிகர் ஒருவர், யாருக்கும் பயமில்லாமல் தனது கருத்துக்களை தைரியமாக செல்லும் வீரர், அவர் தான் உள்ளூர் ஹீரோ ஷாருக்கான் என்று கூறியுள்ளார்.

மேலும் டெஸ்ட் அணியில் மலிங்கா இருந்திருந்தால், இந்திய அணிக்கு பெரும் சவால் இருந்திருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நடக்கும் காலே மைதானத்தில் இருந்து சுமார் 12 கி.மீற்றர் தொலைவில் தான் மலிங்காவின் சொந்த ஊரான ரத்காமா கிராமம் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit