தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு எவ்வளவோ மேல்…..

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Corporal-punishment

என்ர வீட்டில இருந்து தெல்லிப்பழை மகாஜனாக் கல்லுாரி 4 கி.மீ தூரம் இருக்கும். அந்தக் காலத்தில் சைக்கிளில் பொம்பிளைப் பிள்ளைகளுக்குப் பின்னால முன்னால திரிஞ்சு போட்டு பள்ளிக்கூடம் போக ஆராதனை பெல் அடிச்சுப்போடும்.

அங்க எங்களுக்கு என்டு ஒருத்தன் பிரம்போட காத்திருப்பான். மரியாதை கொஞ்சமும் இல்லாமல் கதைக்கிறன் என்டு நினைக்காதேங்கோ…. அது எங்கட வாத்தியார் ஒருத்தா் தான் அப்படி பள்ளிக்கூட வாசலில நிப்பார்.

எங்கள மறிச்சு பின்பக்கம் நிறுத்தி வைச்சு பிரம்பால எங்கட காற்சட்டையின் பின்பக்கதில மேளம் , மத்தளம், பறை எல்லாம் இராகத்துடன் வாசித்துவிட்டு பள்ளிக்கூடத்துக்குள்ளே அனுப்பும் போது நீங்கள் இப்ப திட்டிக் கொண்டு இருக்கிற முள்ளிவாய்க்கால் பிரச்சனை ஞாபக்த்துக்கு வரும்.

நாசமறுப்பான் எப்ப துலைஞ்சு போறானோ தெரியாது என்டு எத்தனை தடவை நாங்கள் எல்லாம் கடவுளை வேண்டியிருக்கிறம் என்டு அந்தக் குறுக்கால போன கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

நாங்கள் எப்படித்தான் வேளைக்கு வீட்டில இருந்து வெளிக்கிட்டாலும் ஏதோ ஒரு காரணத்தினால் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் நேரத்திற்கு ஒரு நிமிசம் பிந்திப் போய்விடும். அனேகம் 5 நாள் பள்ளிக்கூடம் என்றால் என்னுடன் இன்னும் சி்லா் 3 நாளாவது அந்த வாத்திட்ட பிரம்பால் வாங்கி விட்டுத்தான் உள்ளே போறது வழக்கம்.

இந்த வாத்திக்கு ஏதாவது செய்வினை, சூனியம் வைத்தால் என்ன என்டு நானும் என்னுடன் அடிவாங்கிற சிலரும் சோ்ந்து கதைத்து அதற்கான வேலையும் செய்திருக்கிறம். இருந்தும் அந்த வாத்தி அசரவில்லை. தரம் 8ல் இருந்து தரம் பத்து வரை அடி வாங்கி அடி வாங்கி எங்கட பின்பகுதி மரத்துப் போய் விட்டது.

ஒரு நாள் நாங்கள் பள்ளிக்கூடம் போன போது வாசலில் நின்று அடிக்கிற இந்த வாத்தியைக் காணவில்லை. கடமை தவறாது வாசலில் நிற்கின்ற எங்கட தருமப் பிரபு எங்க போட்டார் என்று நாங்கள் நினைத்துக் கொண்டு உள்ளே போய் விசாரித்த போது அந்த வாத்தி வேற பாடசாலைக்கு போட்டார் என்டு தகவல் கிடைச்சிச்சு. அப்படியே போய் பக்கத்தில இருந்த கோவிலுக்கு கற்புரம் வாங்கிக் கொழுத்திவிட்டு வீட்ட போனோம்.

அடுத்த நாள் இன்னொரு வாத்தி முன் வாசலில நின்டார். அந்த வாத்தியை எங்களுக்கு ஏற்கனவே தெரியும். விவசாயம் எடுக்கிற வாத்தி. பேயன் விசரன் போல பள்ளிக்கூடத்திற்குள்ள திரியுற வாத்தி.

இது எங்களை ஒன்டும் செய்யாது என்டு போட்டு ”சோ் கொஞ்சம் லேட்டாகிட்டுது சோ்” என்டு உள்ள போக முற்பட்ட போது சைக்கிள் கரியலை பிடித்து நிறுத்தி டேய் அங்க சைக்கிள விட்டுட்டு இங்க வா என்ட போது அந்த வாத்தியைப் பாக்க இப்பத்த வடிவேலப் போ இருந்திச்சு.

இவன் என்னத்தப் புடுங்கப் போறான் என்டு நினைத்துப் போட்டு சைக்கிளை நிப்பாட்டிப் போட்டு வர பின்னுக்குத் திரும்பி சுவரில கையை வைத்துக் கொண்டு நில்லு என்டு உத்தரவிட்டது அந்த விவசாய வாத்தி. பிறகென்ன படுபாவி மம்பட்டி பிடிக்கிற கையாள விளாச வெளிக்கிட எங்களிடம் இருந்த அனைத்து நீா் வரும் வழிகளாலும் மளமள என்டு நீா் வந்திச்சு. அதோட மட்டும் அவன் விடவில்லை.

சட்டைக்கு ஏன்டா பட்டனைப் போடாமல் வந்தனி என்டு அதுக்கும் அடி, நகம் வெட்டாததைப் பார்த்து அதற்கும் அடி ஒரு நாளிலேயே எங்களைப் போட்டு பின்னி எடுத்துட்டான் படுபாவி.

அப்பத்தான் நினைச்சன். அதிகாரம் வரும் வரைக்கும்தான் எல்லாரும் பார்க்க அப்பாவியா நிப்பாங்கள்.. அதிகாரம் கையில கிடைச்சிச்சு எல்லாரும் வில்லன்கள்தான் என்டு அந்தநேரமே எனக்கு புரிஞ்சு போச்சு.

சரி இப்ப ஏன் இதைச் சொல்ல வாறன் என்டால்………..

ஜே.ஆா் ஜேவா்த்தனா இருக்கும் போது கிளிமூக்கன் எப்ப ஒழிவான் என்டு கும்பிட்டம். அப்புறம் பிரேமதாச வந்தபோது இவன் எப்ப துளைவான் என்டு நோ்த்தி வைத்தம். அப்புறம் சந்திரிக்கா வந்த போது சூா்ப்பனகை போல அவாவை நினைத்து பெரும் சமர் எல்லாம் புரிந்தாம்.

அதுக்கு அடுத்ததா இப்ப இருக்கிற ராஜபக்சவை எப்படி எல்லாம் கொடுமையாய் நினைத்துக் கொண்டு இருக்கினம். ஒன்டை யோசிச்சுப் பாருங்கோ… ஒவ்வொருவரும் எங்களை ஆட்சி செய்த போது எங்களுக்கான துன்பங்கள் எல்லாம் கூடிக் கொண்டு போனதே தவிர குறையவில்லை.

இதற்கான காரணம் என்ன என்றால் நான் பள்ளிக்கூடம் போய் அடி வாங்கினது மாதிரித்தான். நான் அடிவாங்காமல் இருக்க வேணும் என்டால் நான் பள்ளிக்கூடத்துக்கு நேரத்துடன் போயிருக்க வேணும். அதை விட்டு விட்டு பிந்திப் போய் அடிவாங்கிப் போட்டு அடிச்சவனைக் குறை கூறக் கூடாது.

அது போலத்தான் அரசியலிலும் தமிழச் சனமான நாங்கள் யோசிச்சு நடக்க வேணும். ஆட்சியில இருக்கிறவனை கவுட்டுப் போட்டு இன்னொருவனைக் கொண்டுவந்து அவனிட்ட இப்ப இருக்கிறவைய விட இன்னும் இன்னும் வாங்கிக் கட்டிக் கொள்வதிலும் பார்க்க நாங்கள் எங்களைப் பற்றி நன்கு உணா்ந்து ஆட்சியாளா்களுடன் சேர்ந்து நடந்தால் எல்லாம் சரி வரும்.

ஒன்றை மட்டும் கவனத்தில வைத்துக் கொள்ளுங்கள். தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசு எவ்வளவோ மேல். ஏனெனின் அது என்னவெல்லம் செய்யும், என்னவெல்லாம் தரும் என்று எங்களுக்கு தெரிந்திரும்.

ஆனால் தெரியாத தேவதை எமக்கு வந்தால் நாங்கள் என்ன நிலையில் இருக்கிறம் என்டு அது அறிந்து கோபம் கொண்டால் அப்புறம் எங்கட பாடு அதோ கெதிதான்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit