தனது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கமல் ஹாசனின் மகள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தனது இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் புத்த மதத்திற்கு மாறியதற்கு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அஜித் குமாரின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகாகவுள்ளார் நடிகர் கமல் ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன்.

சமீபத்தில் விவேகம் படம் குறித்து நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அக்‌ஷரா “எனக்கும் எனது தந்தையை போல் கடவுள் நம்பிக்கை கிடையாது, ஆனால் தற்போது புத்த மதத்தின் வாழ்வியல் முறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது, அதனால் புத்த மதத்தில் என்னை இணைத்து கொண்டேன்” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல் ஹாசன் “ஹாய்! அக்‌ஷு… நீ மதம் மாறி விட்டாயா? , நீ மதம் மாறினாலும் மாறாவிட்டாலும் எனது அன்புக்கு உனக்கு உள்ளது, உனக்கு எனது வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அக்‌ஷரா ஹாசன் “இல்லை அப்பா, நான் இன்னும் நாத்திகராக தான் இருக்கிறேன், ஆனால் புத்த மதத்தின் வாழ்வியல் முறை எனக்கு பிடித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*