விவேகம் படத்தால் அக்‌ஷரா ஹாசனின் மனமாற்றம்!

பிறப்பு : - இறப்பு :

கமல் நாத்திராக தன்னைக் காட்டிக்கொண்டிருக்கும் வேளையில் அவரது இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் பெளத்தராக மதம் மாறியிருக்கிறார். அவர் புத்தரின் கொள்கைகளையும், ஆன்மாவையும் தேடி பெளத்த மதத்தை தழுவியுள்ளதாக கூறப்படுகிறது.

அக்‌ஷரா ஹாசன் பாலிவுட்டில் ஷமிதாப் படத்தில் நடிகையாக அறிமுகமானார். தற்போது ரிலீசாக இருக்கும் விவேகம் படத்தில் அஜீத்துடன் நடித்துள்ளார். இந்தப்படத்தில் ப்ரமோசன் பணிகளுக்காக சென்னையில் இருக்கும் அக்‌ஷரா அடிக்கடி மீடியாக்களை சந்தித்து வருகிறார். இயக்குநராகும் கனவில் இருக்கும் அக்‌ஷரா ஹாசன், பாலிவுட் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியும் வருகிறார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டால், ‘ எனது அப்பா கமல், அம்மா சரிகா எனது அக்காள் ஸ்ருதிஹாசன் என அனைவரும் சினிமாவில் இருக்கிறார்கள். எல்லோரும் சினிமாவை நேசிக்கிறார்கள். நானும் என்னை இங்கே ஒரு இயக்குநராக நிலைநிறுத்த விரும்புகிறேன்’ என்கிறார். கமலின் அரசியல் பிரவேசம் பற்றிக்கேட்டால், ‘அது பற்றி அவர் தான் முடிவெடுப்பார். இதற்குமேல் பேச எதுவும் இல்லை’ என்கிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit