இளந்தமிழகம் இயக்கத்திற்குள் நடைபெற்று வரும் சிக்கலும், சென்ற வாரம் அலுவலகத்தில் நடந்தவையும்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இளந்தமிழகம் இயக்கத்திற்க்குள் நடைபெற்று வரும் சிக்கல் பற்றியும், அலுவலகத்தில் சென்ற வாரம் நடந்த பிரச்சனைகளைப் பற்றியும் பல்வேறு அனுமானங்களும், அவதூறுகளும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பப் பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலும் சி.பி.எம்.எல்.மக்கள் விடுதலை குழுவினாரால் எழுதப்பட்டவை. எங்கள் மீது வைக்கப்படும் அவதூறுகளுக்கு நாங்கள் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்பதாலே இந்த நீண்ட அறிக்கை. பெரும்பான்மை பொதுக்குழுவினரின் ஆதரவுடன் செயல்பட்டுவரும் இளந்தமிழகம் இயக்கம் இதில் காலவிரயம் செய்யமால், தொடர்ந்து அரசியல், சமூக மாற்றப்பணிகளில் எங்களை ஈடுபடுத்திகொள்வோம்.

1. சூலை 16 மாலை இளந்தமிழகம் இயக்க அலுவலகத்தில் நடந்த ஜி.எஸ்.டி.பற்றியகூட்டத்திற்கு வினோத், ராசன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் சென்ற காரணம் என்ன ?

இளந்தமிழகம் இயக்க அலுவலகம் , இளந்தமிழகம் அலுவலக பொதுக்குழு உறுப்பினர்களால் ஒப்பந்தம் போடப்பட்டு, ஒரு லட்ச ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டு, பல்வேறு தோழர்களின் உழைப்பாலும் சிறு சிறு பங்களிப்புகளாலும் உருவாக்கப்பட்ட ஒன்று. 49 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழுவில் வினோத், ராசன் காந்தி உட்பட 31 பொதுக்குழு உறுப்பினர்கள், தோழர் செந்தில் குழுவினரின் அமைப்பு விரோத நடவடிக்கைக்கு எதிராக இருக்கின்றனர். இந்நிலையில் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,தோழர் செந்தில், பரிமளா, ஜார்ஜ்,பாலாஜி,சதீஷ்,தீபன் ஆகியோர் அமைப்பை விட்டு வெளியேற்றப்பட்டனர். இவர்களையும் சேர்த்து, இவர்களுக்கு ஆதரவான பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 மட்டுமே. மீதமுள்ள 6 பேர் இரு தரப்பையும் ஆதரிக்காமல், நடுநிலை வகிப்பவர்கள்.

செந்தில், பரிமளா உள்ளிட்ட நபர்கள் நீக்கப்பட்டதற்கான காரணம் சிபிஎம்எல் மக்கள் விடுதலை கட்சி பதவிகளையும் விடமால், இளந்தமிழகம் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பிலும் இருந்து கொண்டு இரண்டு பதவிகளையும் நுகரும் அதிகார வேட்கையினால் மட்டுமே அன்றி. அவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதால் அல்ல.

பொதுக்குழுவில் சிறுபான்மையாக இருக்கும் செந்தில் குழுவினர், அலுவலக சாவியை கடந்த சில மாதங்களாக கைப்பற்றி வைத்து, கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர். இதை எதிர்த்து, தோழர் ஜோன்சன்,வினோத் தொடர்ந்து வீட்டு உரிமையாளரை சந்தித்து விளக்கம் கோரியுள்ளனர். வீட்டு உரிமையாளர் பிரச்சினையை பூசி மழுப்புவதும், “அவர்கள் கூட்டம் நடத்தும் போது போய்க் கேட்க வேண்டியது தானே” என்று உதாசீனமாக பேசியும் இவர்களை திருப்பி அனுப்பியிருக்கிறார். இப்படி மூன்று மாதங்களாக நடந்து வந்த நிலையில், தோழர் ஜோன்சனை வீட்டு உரிமையாளர் ஒருநாள், “கிளம்புகிறாயா ? இல்லையா உன்னை உதைக்கவா? என்று மிரட்டியிருக்கிறார். ஓனரின் இந்த செய்கை, பொதுக்குழுவின் மற்ற தோழர்களுக்கு பலத்த சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

இந்நிலையில் ஒப்பந்தத்தில் இருக்கும் பெயர்களான இளங்கோவன், ஜோன்சன் பெயர்களை நீக்கி விட்டு, செந்தில் குழுவினர் முறைகேடாக வேறு சில பெயர்களைச் சேர்த்து சட்டத்திற்கு புறம்பாக ஒப்பந்ததை மாற்றியிருக்கிறார்கள். வீட்டு உரிமையாளருக்கு அதிக வாடகை கொடுத்து, இந்த முறைகேட்டுக்கு அவரையும் சம்மதிக்க வைத்திருக்கிறார்கள். வாடகை அதிகம் கிடைக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக, அசல் ஒப்பந்தத்தில் எங்கள் தரப்பில் இருக்கும் ஜோன்சன், இளங்கோவிற்கு இது குறித்து வீட்டு உரிமையாளர் தெரியப்படுத்தவில்லை.

இளந்தமிழகம் அலுவலகத்தில் கணினி, ப்ரொஜக்டர், கேமிரா, டிவிடி ரைட்டர், அச்சு எந்திரம், சோஃபா, ஆயிரக்கணக்கில் புத்தகங்கள், வெளியீடுகள், குறுந்தகடுகள் என ஐந்து லட்சத்துக்கும் விலை மதிப்புள்ள பொருட்களும், ஃபைட் தொழிற்சங்கம் பதிவுக்கான முக்கிய ஆவணங்களும் உறுப்பினர்களின் படிவங்களும், ஒரு லட்ச ரூபாய் முன் பணமும் செந்தில் பரிமளா உள்ளிட்ட ஒரு சிறு குழுவினரின் ஆதிக்கத்தின் கீழ் தேங்கி நிற்பதையும், முறைகேடாக போடப்பட்ட ஒப்பந்தத்திற்கு நியாயம் கேட்க வீட்டு உரிமையாளரைச் சந்திக்கவும் , செந்தில் குழுவினரிடம் உரிமை கோரவும், இளந்தமிழகம் இயக்கத்தின் தோழர்கள் வினோத், நாசர், ராசன் காந்தி, வசுமதி ஆகியோர் சென்றிருக்கிறார்கள்.

2. சூலை 16 அன்று நடைபெற்றுக் கொண்டிருந்த ஜி.எஸ்.டி நிகழ்வில் வினோத்,ராசன் காந்தி உள்ளிட்ட தோழர்களால் ஏதேனும் இடையூறு ஏற்படுத்தப்பட்டதா?

கூட்டம் நடந்து கொண்டிருந்த போது வினோத், ராசன் காந்தி இடையில் புகுந்து இடையூறு ஏற்படுத்தினார்கள், பிரச்சினை செய்தார்கள் என்று செந்தில் குழுவினர் தொடர்ந்து பொய்ப்பரப்புரை செய்து வருகிறார்கள். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

கூட்டம் நடந்து கொண்டிருந்த போது தோழர்கள் வினோத், நாசர், வசுமதி உள்ளிட்டோர் அமைதியாக வந்தமர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது தோழர் ஆனந்த் உரையாற்றிக் கொண்டிருந்தார். உரை முடிவடையும் போது, கருத்துரை ஆற்றிய தோழர் ஆனந்திடன் கேள்விகள் கேட்கலாம் என அறிவிக்கப்பட்டது. தோழர் வசுமதியும் ஜி.எஸ்.டி குறித்து தோழர் ஆனந்திடம் சில கேள்விகள் கேட்டிருக்கிறார். அவரும் பதிலளித்திருக்கிறார். இறுதியாக, தீபன் நன்றியுரை வழங்கியிருக்கிறார். இவ்வளவும் தோழர் வினோத், ராசன் காந்தி, வசுமதி, நாசர் ஆகியோர் முன்னிலையில் தான் நடந்திருக்கிறது. இப்படியிருக்க கூட்டத்தின் இடையில் புகுந்து பிரச்சினை செய்ததாக, செந்தில் குழுவினர் செய்யும் பரப்புரை முழுக்க பொய். இதை நீங்கள் தோழர்.ஆனந்திடமே கேட்டு உறுதி செய்து கொள்ளலாம்.

3. சரி, பிறகு பிரச்சினையை முதலில் துவக்கியது யார் ? அங்கு நடந்தது என்ன ?

கூட்டம் முடிந்த பிறகு, தோழர் செந்தில், சதீஷ் சீனுவை அழைத்து, அவரது இரு சக்கர வாகனத்தில் தோழர் ஆனந்தை போய் விட்டு விட்டு வருமாறு கூறுகிறார். அவருமஅதை ஏற்றுக் கொண்டு செல்கிறார். பிறகு செந்தில், வினோத், நாசர், ராசன் காந்தியை பார்த்து “நீங்கள் பிரச்சினை செய்வதற்காகவே வந்திருப்பது போல் தெரிகிறது. வெளியேறுங்கள்” என்று உரத்த குரலில் மிரட்டத் தொடங்குகிறார். இதைக் கேட்டு கொதிப்படைந்த தோழர் நாசர் உள்ளிட்ட தோழர்கள் “உங்களுக்கு இந்த அலுவலகத்தில் உரிமை இருப்பது போலவே எங்களுக்கும் உரிமை இருக்கிறது. இது நீங்கள் சம்பாதித்த சொத்து அல்ல” என்கிற ரீதியில் எதிர்க்கிறார்கள். வாக்குவாதம் வலுக்கிறது. இந்நிலையில் தோழர் பரிமளா, வசுமதியை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டுகிறார். முஷ்டியை மடக்கி அடிக்க வருவது போல், பரிமளா தோழர் வசுமதி மீது பாய்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த வசுமதி, “என்ன தோழர், இப்படியெல்லாம் பேசுறீங்க…?” என்று அவருக்கே உரித்தான சன்னமான குரலில் தான் கேட்டிருக்கிறார். “என்னது தோழரா…தோழர் லாம் என்ன கூப்பிடாத…துரோகி…ஃப்ராடு” என்றெல்லாம் நா.கூசும் வார்த்தைகளால் தோழர் பரிமளா தொடர்ந்து வசுமதியை தாக்குகிறார். பிரிதொரு சந்தர்ப்பத்திலும் முஷ்டியை மடக்கி அடிக்க வருகிறார். வீட்டு உரிமையாளரும் அவரது மகனும் இடையில் புகுந்து, வினோத் குழுவினரைப் பார்த்து “நீங்கள் வெளியேறுங்கள். நீங்கள் யார்” என்று கேட்டு வெளியேற்றப்பார்க்கிறார். தோழர் வினோத், “எங்களுக்கு இந்த அலுவலகத்தின் மீது முழு உரிமை இருக்கிறது. ஒப்பந்தத்தில் கூட எங்கள் பெயர் தான் இருக்கிறது” என்று ஒப்பந்தத்தின் நகலை அவரிடம் காட்டுகிறார். தனது குட்டு வெளிப்பட்டதை அறிந்த ஓனர், பதிலளிக்க முடியாமல், இருவருமே வெளியேறுங்கள் என வலுக்கட்டாயமாக இரு தரப்பையும் வெளியேற்ற முயல்கிறார். ( இந்நிலையில் தீபன், பரணில் ஏறி கேமிராவை அபகரிக்கவும் முயற்சி செய்து, தடுக்கப்படுகிறார் ) இரு தரப்பும் வெளியேற்றப்படுகிறார்கள்.

வெளியே வந்த இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றி, வாய்ச்சண்டையாக நீண்டு கொண்டிருக்கிறது. தோழர் ஆனந்தை வழியனுப்பி விட்டு, தனது இரு சக்கர வாகனத்தில் வந்த சதீஷ் சீனு,ஹெல்மட்டை கழட்டாமல் தகாத வார்த்தைகளால், வினோத்தைப் பார்த்து திட்டத் தொடங்குகிறார். ஹெல்மெட்டுக்குள் இருப்பதால் யாரென்று அடையாளம் காண முடியாததால், “யார் நீ…முகமூடி கொள்ளைக்காரன் போல ஹெல்மட்டுக்குள் இருந்து பேசுகிறாய்..முதலில் ஹெல்மட்டைக் கழட்டு” என்று தோழர் இளையராஜா கேட்கிறார். இதை தான், தோழர் செந்தில் பரிமளா குழுவினர் “அடையாளம் தெரியாத அடியாட்களைக் கொண்டு தாக்கினர்” என்கிற பொய்ப்பரப்புரையாக மாற்றினர். “வாய்த்தகராறு (word quarrel)” என்பதைத் தாண்டி, அங்கு எந்தவிதமான அடிதடியோ, கைகலப்போ எதுவும் நடக்கவில்லை என்பது தான் எதார்த்தம்.

இவற்றுக்கெல்லாம் ஆதாரம் என்ன? என்று கேட்க விரும்புவோர், செந்தில் குழுவில் இருக்கும் பாலாஜி, தீபன், ஆகியோரது அலைபேசியை வாங்கி முழு காணொளியைப் பார்க்கவும். அல்லது பாலாஜி, தீபனே முழுமையாகவோ அல்லது எடிட் செய்தோ அக்காணொளிகளை பொதுவெளியில் முன் வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

4. காவல்துறை அலுவலகத்திற்கு ராசன் காந்தி , வினோத் சென்றது ஏன் ?

மேற்சொன்ன சம்பவம் நடந்த சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு வினோத் ராசன் காந்தி, வசுமதி உள்ளிட்டோர் காவல் நிலையத்துக்கு சென்றிருக்கிறார்கள். இவர்கள் ஏன் காவல் நிலையம் செல்ல வேண்டும். இந்த கேள்வி மிக முக்கியமானது. காரணம், செந்தில் குழுவினர் செய்யும் பொய்ப்பரப்புரையில் மிகவும் முக்கியமான அம்சம் இது. அதாவது, “உடன் களத்தில் நின்ற தோழர்களை ஆளும் வர்க்கத்திடம் வினோத், ராசன் காந்தி போன்றோர் காட்டிக் கொடுத்திருக்கிறார்கள்” என்று தொடர்ந்து பல்வேறு தளங்களில் எழுதி வருகிறார்கள். தன்னெஞ்சறிய பொய்யுரைக்கும் செயல் அது.

நன்றாக கவனிக்கவும். தோழர்கள் வினோத், ராசன் காந்தி ஆகியோர் காவல் நிலையத்திற்கு சென்றது, தோழர்கள் செந்தில், பரிமளா மீது புகார் கொடுப்பதற்காக அல்ல. அலுவலக ஒப்பந்தத்தை முறைகேடாக மாற்றிய வீட்டு உரிமையாளர் மீது புகார் கொடுக்கத் தான் சென்றிருந்தார்கள். மாறாக, தோழர் செந்திலையும் பரிமளாவையும் சிறைக்கும் அனுப்பும் நோக்கம் எள்ளளவும் கிடையாது. இதற்காக காவல் நிலையத்தில் பேசி விட்டு, வெளியே வரும் போது, எதிர் தரப்பில் இருக்கும் தோழர் அருந்தமிழன் காவல் நிலையத்துக்குள் உள்ளே நுழைகிறார். எதற்கு ?

வீட்டு உரிமையாளர் மீது புகார் கொடுக்கத்தான் முன்பு நடந்த பொதுக்குழு கூட்டத்தின் குறிப்புகளை அச்சு எடுத்து சென்றுள்ளனர். இதை தான் செந்தில் குழு தங்கள் மீது புகார் கொடுக்க அச்செடுத்து வந்துள்ளார்கள் என சொல்கின்றார்கள்.

5. யார் முதலில் காவல்துறையில் புகார் கொடுத்தார்கள் ?

வினோத், நாசர், வசுமதி ஆகியோர் வீட்டு உரிமையாளர் மீது முறையாக புகார் கொடுப்பதற்காக, இரவு பத்து மணி வரை தட்டச்சு செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது வேளச்சேரி காவல் நிலையத்திலிருந்து ஒரு அழைப்பு வருகிறது. காவல் துறை அதிகாரி ஒரு விஷயத்தை சொல்கிறார். நீங்கள் அலுவலக ஒப்பந்தம் , வீட்டு உரிமையாளர் மீது புகார் கொடுக்க வந்ததாக சொன்னீர்கள். ஆனால் நடந்த சம்பவம் வேறாக இருக்கும் போலத் தெரிகிறதே? ஒரு தரப்பு வந்து நீங்கள் தாக்கியதாகவும், சதீஷ் சீனு காயமடைந்ததாகவும், பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் ஒரு புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் என்ன செய்தீர்கள். உங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் போகிறோம். அப்படி நடந்தால் நீங்கள் சிறைக்கு செல்ல வேண்டி வரும்” என்று கூறுகிறார். இப்படியொரு புகாரை யார் கொடுத்திருப்பார். செந்தில், பரிமளா குழுவினர் தானே. அப்படியெனில் தோழர்களை சிறைக்கு அனுப்பும் நோக்கம் யாருக்கு முதலில் இருந்திருக்கிறது? ஆளும் வர்க்கத்திடம் தோழர்களை காட்டிக் கொடுக்கும் துரோகச் செயலை யார் செய்தது ? இயக்க அலுவலகத்தை மீட்கப் போராடி, அதை மீட்கும் நோக்குடன் காவல் நிலையம் சென்ற வினோத், ராசன் காந்தி குழுவினர் ஆளும் வர்க்கத்துடன் சேர்ந்து கொண்டார்களா ? இல்லை. இவர்களை சிறைக்கும் அனுப்பும் நோக்கமே முதன்மையானது என கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்த செந்தில், பரிமளா குழுவினர் சொல்வது உண்மையல்ல. இந்த கேள்விக்கான விடை இன்னும் அடுத்தடுத்த பதில்களில் தெளிவாக ஆதாரத்துடன் முன் வைக்கிறோம்.

விஷயத்துக்கு வருவோம். காவல்துறை அதிகாரியின் அழைப்பு வந்த பிறகு, வினோத், ராசன் காந்தி, வசுமதி தோழர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். இந்த முதல் தகவல் அறிக்கையின் விளைவுகளிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டுமென்றால், நிஜமாகவே நடந்த சில சம்பவங்களை அவர்கள் தம் புகாரில் ஏற்றியாக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார்கள். அதன் படி, தோழர் பரிமளா மற்றும் சிலர் வசுமதியை மோசமான வார்த்தைகளால் திட்டியதையும், ஹெல்மெட் சம்பவத்தையும் குறிப்பிடுகிறார்கள். இது எதுவும் பொய் அல்ல. நடந்த சம்பவம். தோழர் செந்தில் குழுவினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை என்றால், இப்படியொரு சம்பவம் நடந்தது காவல் துறை அறிந்து கொள்ள வாய்ப்பேயில்லை. இந்த புகாரை எடுத்துக் கொண்டு நள்ளிரவு காவல் நிலையத்துக்கு வினோத், ராசன் காந்தி தோழர்கள் செல்கிறார்கள். இந்த புகாரை, மறுநாள் காலை 10 மணிக்கு வந்து தரும் படி இவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. காரணம் எதிர் தரப்பும் மறுநாள் இதே நேரம் வருகிறார்கள் என்பதால்.

செந்தில், பரிமளா உள்ளிட்டோர் கொடுத்த புகார் எண் 38, எங்களின் புகார் எண் 39. யார் முதலில் புகார் கொடுத்தார் என இதைவிட வேறு எந்த ஆதாரமும் தேவையில்லை.

6. அலுவலகத்தின் ஒப்பந்தம் யார் பெயரில் உள்ளது ?

2014 ஆம் ஆண்டு போடப்பட்ட அலுவலக ஒப்பந்தத்தில் எங்கள் தரப்பில் இருந்து தோழர் ச.இளங்கோவன் மற்றும் ஜோன்சன் பெயர்கள் இருக்கின்றன. இவர்கள் இருவருமே, தோழர் செந்தில் குழுவினரின் அமைப்பு விரோத் நடவடிக்கை எதிராக இருக்கிறார்கள் என்பதற்காகவும், அமைப்பின் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களிடமிருந்து இந்த அலுவலகத்தை ஆக்கிரமிப்பதற்காகவும், தோழர் செந்தில், பரிமளா, ஜார்ஜ் உள்ளிட்டோர் அலுவலக உரிமையாளரிடம் வாடகை அதிகமாக கொடுத்து, முறைகேடாக பெயர்களை மாற்றி, புதிய ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். இது குறித்து அசல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எங்கள் தரப்பு தோழர்கள் ஜோன்சன், இளங்கோவிற்கு வீட்டு உரிமையாளர் தெரிவிக்கவில்லை. இது தான் சிக்கலின் அடிப்படை பிரச்சினையே.

(அந்த ஒப்பந்த நகல், அலுவலக உரிமையாளரிடன் தற்போது கொடுக்கப்பட்டிருக்கிறது. எம்மிடமும் இருக்கிறது. ஆதாரம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்)

7. சூலை 17 அன்று காவல்நிலையத்தில் என்ன நடந்தது ?

காவல்துறையின் அழைப்புப் படி இரு தரப்பும் தத்தம் புகார்களோடு மறுநாள் காலை அதாவது ஜூலை 17 அன்று வேளச்சேரி காவல் நிலையத்துக்கு வந்து சேர்கிறார்கள். எதிர் தரப்பு வழக்கறிஞரும் வருகிறார். தோழர் செந்தில், பரிமளா, சதீஷோடு வந்த குழுவில் பெரும்பாலும் சி.பி.எம்.எல் கட்சியைச் சேர்ந்த ஆட்கள் தான். இரு தரப்பையும் வைத்து பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. ஒரு கட்டத்தில் பெண்கள் வெளியேறுங்கள், மற்றவர்களுடன் பேச்சு வார்த்தை தொடரும் என காவல்துறை அதிகாரி கட்டளையிடுகிறார். ஆகவே எதிர்தரப்பில் இருந்து ரமணி, பரிமளா ஆகியோரும், எம் தரப்பில் இருந்து வசுமதியும் வெளியேறுகின்றனர். சிறிது நேரத்துக்கு பிறகு, இரு தரப்பிலிருந்தும் தலா இருவர் சிறைக்குச் (ரிமாண்ட்) செல்ல வேண்டும் என்று காவல்துறை அதிகாரி சொல்கிறார். அதாவது எதிர் தரப்பில் இருந்து செந்தில், சதீஷ் சீனுவும், இங்கிருந்து வினோத், பட்டுராசனும் ரிமாண்ட் செய்யப்பட வேண்டும் என்பது தான் காவல்துறை கூறுவது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தோழர்கள் வசுமதியும், அருணகிரியும் என்ன செய்வது என்று தெரியாமல், அவர்களுக்குத் தெரிந்த அரசியல் தலைவர்களையெல்லாம் அழைத்துப் பேசத் தொடங்குகிறார்கள். வழக்கறிஞர் தோழர் மனோகரனையும் அழைக்கிறார்கள்.

இது சாதாரண வழக்கு தானே..மாலைக்குள் பிணைக்கு விண்ணப்பித்து, விடுதலை கேட்டுப் பெற்று விடலாம். இருவரும் சமாதானமாகப் போய் விட்டால், பிணை கேட்டுப் பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று தோழர்கள் வசுமதிக்கும் அருணகிரிக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் காவல் நிலையத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, சதீஷ் சீனு வெளியேறுவதை எல்லோரும் பார்க்கிறார்கள். அதாவது சதீஷ் சீனு, தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியில் இருக்கிறார். இந்த வழக்கின் மூலம் அவருடைய வேலைக்கும் எதிர்காலத்துக்கும் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படலாம் என கருத்தில் கொண்டு அவர் விடுவிக்கப்பட்டு, பரிமளா தன்னிச்சையாக, ரிமாண்ட் செய்யப்படும் இருவரில் ஒருவராக முன்னிறுத்திக் கொள்கிறார். நன்றாக கவனிக்கவும். ஒரு பெண் பொய்யாக குற்றம் சாற்றப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார் என தொடர்ந்து அவர்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பது எப்பேற்பட்ட பொய் என்பதை அறிய இந்த ஒரு சம்பவம் போதும். பரிமளாவை யாரும் சிறைக்கு அனுப்ப முயற்சி செய்யவில்லை. தோழர்கள் எவரையும் சிறைக்கு அனுப்பும் நோக்கம் எமக்கு இருக்கவில்லை. ஆனால் சிபிஎம்எல் செந்திலும், பரிமளாவும் சிறைக்குச் செல்வதற்கு தயாராகவே இருந்தார்கள். மதியம் நால்வரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

8. நீதிமன்ற வளாகத்தில் என்ன நடந்தது ?

இரு தரப்பும் நீதிமன்றத்திற்கு வருகிறது. வழக்கு, நீதிமன்றங்கள், காவல் நிலையம் இதில் எவ்வித முன் அனுபவமும் இல்லாத எம் தோழர்கள் செய்வதறியாது பல்வேறு அரசியல் ஆளுமைகள், தலைவர்களுக்கு அழைத்து சமாதான பேச்சு வார்த்தைக்கு முயல்கிறார்கள். இதன் நோக்கம் என்னவெனில், இந்த சண்டை இதோடு முடியப்போவதில்லை. சமகால அரசியல் சூழல் மிக மோசமானதாக இருக்கிறது. ஆளும் வர்க்கமும் உளவுத்துறையும் இயக்க அரசியலில் ஈடுபடும் தோழர்களை காவு வாங்கும் பாசிச நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிறைக்கு செல்ல வேண்டி வந்தால் இரு தரப்புக்கும் மட்டுமில்லாமல், நாம் மேற்கொண்டிருக்கும் அரசியல் லட்சியத்துக்குமே இடையூறாக இருக்கும். ஆகவே அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் வாய்ப்பளிக்காமல், சமாதானமாக போவதாக கூறி விட்டு, முரண்களை வெளியே போய் களைந்து கொள்ளலாம் என்கிற முனைப்புடன், வசுமதியும் அருணகிரியும் தோழர் தியாகு, ஜவஹர், ஓவியா, மருது பாண்டியன் ஆகியோரை அழைத்து, எதிர் தரப்பிடம் பேசி சமாதானத்திற்கு வருமாறு கோரிக்கை வைக்கிறார்கள். தோழர் மருது பாண்டியன் முதலில் பேசுகிறேன் என்று சொல்கிறார். சிறிது நேரத்திற்கு பிறகு வசுமதி தோழரை அழைத்து “இல்லை தோழர்…சமாதான பேச்சு வார்த்தை நடக்காது போல…அவர்களின் நடவடிக்கை மாறுகிறது. உங்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். பார்ப்போம்” என்று கூறி அழைப்பை துண்டிக்கிறார். அதோடு காலையில் காவல்நிலையத்தில் இருந்த பொழுது தோழர்.கொளத்தூர் மணியை அழைத்து வழக்கு வேண்டாம், அரசிடம் செல்வது சிக்கலை மேலும் வளர்க்கவே உதவிசெய்யும், அதனால் சமாதானமாக பேசிகொள்ளலாம் என்றார். அதற்கான முயற்சிகளை எடுங்கள் என்றார். இதற்கு தோழர்.கொளத்தூர் மணி அவர்களே சாட்சி.

அது மட்டுமின்றி, சி.பி.எம்.எல் கட்சியின் ரமணி நீதிமன்ற வளாகத்திலேயே நின்று கொண்டு, “இவர்களெல்லாம் துரோகிகள். சிறைக்கு அனுப்பினால் தான் இவர்கள் அடங்குவார்கள். இவர்களை ஒழித்துக் கட்ட இதான் வழி..சாவட்டும்” என்று சபிக்கிறார். அக்கட்சியின் சதீசும் இவ்வாறே சில வார்த்தைகளை உதிர்க்கிறார். வினோத், பட்டுராசனை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்கிற அவர்கள் நோக்கத்தை மிக வெளிப்படையாகவே அவர்கள் அறிவித்தது மட்டுமின்றி, திரைமறைவு வேலைகளிலும் ஆளும் வர்க்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வேலைகளையும் செய்கிறார்கள். வினோத் பட்டுராசனுக்காக ஆஜரான வழக்கறிஞர் தோழர் சேகரை “மோடிக்கு ஆஜராவீர்களா?” என எதிரி தரப்பில் நிறுத்தி கேள்வி கேட்டார்கள்.

இந்நிலையில் வழக்கறிஞர் தோழர் மனோகர் வருகிறார். எதிர் தரப்பை அணுகி, இது சாதாரண வழக்கு தானே. சமசரமாக போய் விட்டால், இப்போதே பிணை கிடைத்து விடுமே என்று பேசுகிறார். அப்போது தான் ரமணியும், சதீசும் இதை நிராகரித்து, “அவர்கள் சாவட்டும். சிறைக்கு அனுப்பியே ஆக வேண்டும். சமாதானமெல்லாம் முடியாது” என்று பேசி, தோழர் மனோகரையும் உதாசீனப்படுத்தி திருப்பியனுப்புகின்றனர். ( ஆதாரம்: வழக்கறிஞர் மனோகர், பாஸ்கர்

9. யார் முதலில் பேச்சுவார்த்தைக்கு முயன்றது? யார் மூலமாக முயற்சிக்கப் பட்டது?

இந்த கேள்விக்கான பதில் 8 ஆம் கேள்வி பதிலிலேயே இருக்கிறது. நடந்ததை தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், வினோத், ராசன் காந்தி குழு மட்டுமே சமாதான பேச்சு வார்த்தைக்கு முயன்றது முழுக்க முழுக்க உண்மை. ஆளும் வர்க்கத்திடம் இதைக் கொண்டு செல்லக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். இதற்கான ஆதாரம் யார் என்றால் தோழர்கள் கொளத்தூர் மணி, ஜவஹர், ஓவியா, தியாகு, செயப்பிரகாஷ், மருது பாண்டியன், திருப்பூர் குணா என முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவருமே. இவர்கள் அனைவரையுமே முன்னிறுத்தி, சமாதான பேச்சு வார்த்தைக்கு முயன்றது வினோத், ராசன் காந்தி ஆகியோரின் தரப்பு மட்டுமே.

10. இருதரப்பு தோழர்களையும் சிறையில் அடைக்க அரசின் சதி மட்டும் தான்காரணமா?

அரசின் சதி மட்டுமே காரணம் இல்லை. தோழர்கள் வினோத், பட்டுராசனை சிறையில் அடைக்க வேண்டும் என்று முழு மூச்சுடன் செயல்பட்டது சி.பி.எம்.எல் கட்சித் தரப்பு. வழக்கறிஞர்கள் மூலம் தோழர் செந்திலுடன் பேசிய போது, நீதிபதி முன்பு சமாதானப் போகிறோம் என தான் தெரிவித்து விடுவதாகவும், பிணை பெற்றுக் கொள்ளலாம் எனத் தோழர் செந்தில் கூறியதாகவும் அறிகிறோம். ஆனால்

திரை மறைவில் நடந்தது வேறு கதை.

வினோத் பட்டுராசனை கைது செய்து, சிறையிலடைப்பது மட்டுமின்றி, எந்த வழக்குகள் அவர்கள் மீது போடப்பட வேண்டும் என்று முடிவு செய்தது வரை, முயற்சி செய்து காய்களை நகர்த்தியது சி.பி.எம்.எல் கட்சிக் கும்பல். இதற்காக கிண்டி காவல் நிலையத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசியது, அழுத்தம் கொடுத்தது, காவல் நிலையத்தில் ரமணி தோழர் நடந்து கொண்ட விதம், நீதி மன்ற வளாகத்தில் அவர்களின் வக்கிரம் தொனிக்கும் பேச்சு, வழக்குகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே, தோழர் அருண் நெடுஞ்செழியன் போன்றோர் நீதிமன்ற வளாகத்தில் வினோத்திடம் வீண் சண்டைக்கு இழுத்தது என ஒட்டு மொத்தமாக, ஆளும் வர்க்கத்துடன் சேர்ந்து கொண்டு அவர்களின் தூண்டிலுக்கு மீனை பிடித்து திணித்தது சி.பி.எம்.எல் கட்சிக் கும்பலே.

காவல் நிலையத்திலிருந்து நீதிமன்றத்துக்கு செல்லும் வரை எப்படியும் சமாதானமாகப் பேசி விடலாம். விடுதலை கிடைத்து விடும் என்கிற நம்பிக்கையுடன் வினோத், ராசன் காந்தி உள்ளிட்டோர் எவ்வித முன் தயாரிப்புகளும் இன்றி வண்டியில் ஏறுகிறார்கள். ஆனால் எதிர் தரப்போ, சமாதானம் என்கிற பேச்சு வார்த்தைகே இடமில்லை. நாங்கள் சிறை சென்றாவது, வினோத் பட்டுராசனையும் பழி வாங்க வேண்டும் என்கிற வெறியுடன், தோழர் செந்தில் பரிமளா ஆகியோர் சிறை செல்ல ஆயத்தமாய் பல நாட்களுக்கு தேவையான உடைகள் சகிதமாக நீதிமன்ற வளாகத்துக்கு வருகிறார்கள்.

இந்த சம்பவங்களிலிருந்து, செந்தில் பரிமளா ஆகியோர் உள்ளடங்கிய சி.பி.எம்.எல் கட்சி ஆளும் வர்க்கத்துடன் எவ்வாறு கை கோர்த்து ஒரு சூழ்ச்சியை நடத்தி முடித்தார்கள் என்பது தெளிவாகப் புரியும். ஆனால் இதற்கு மாறாக, வினோத் ராசன் காந்தி தான் ஆளும் வர்க்கத்தோடு வேலை செய்தார்கள் என்று முகநூல் முழுவதும் எழுதிக் குவித்து வருகிறார்கள். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

11. சூன் 26 இளந்தமிழகத்தின் ஒட்டுமொத்த பொதுக்குழுவினால் ஏற்கப்பட்ட தீர்மானம்என்ன‌?

சிபிஎம்எல் மக்கள் விடுதலை (தமிழ்நாடு) கட்சி உட்பட எந்தக் கட்சியின் தலையீடும் இளந்தமிழகம் இயக்கத்திற்குள் இருக்கக் கூடாது என்றும், இயக்கத்தின் பொதுக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் வேறு அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கக் கூடாது என்றும் 2016 ஜூன் 12, 26 பொதுக் குழுவில் ஒரு மனதாக தீர்மானங்களை நிறைவேற்றினோம். இந்த தீர்மானம் தோழர்.செந்தில், பரிமளா உள்ளிட்ட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

ஆனால் இந்த தீர்மானத்தின் பின்பும் அவர்கள் தொடர்ந்து அமைப்பு விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் நவம்பர் 19 பொதுகுழு கூட்டம் கூட்டப்பட்டு தீர்மானம் இயற்றப்பட்டு நீக்கப்பட்டார்கள். சனநாயகத்திற்கு எதிராக தொடர்ந்து தாங்கள் இளந்தமிழகம் இயக்கம் என சொல்லிக் கொண்டு கூட்டங்கள் நடத்தி பொது வெளியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றார்கள்.

12. இளந்தமிழகம் இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது? இயக்கத்துக்கும் கட்சிக்குமானதொடர்பு என்ன?

2008ஆம் ஆண்டு ஈழத்தில் நடந்துக்கொண்டிருந்த தமிழின அழிப்புப் போரை நிறுத்த வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் நாள்தோறும் போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தபோது, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய இளைஞர்கள் சிலரும் தங்கள் துறையினரை திரட்டி போராட்டம் நடத்த வேண்டும் என்று ஒரு முயற்சியை மேற்கொண்டோம். Stop War! Save Tamils! என்கிற முழக்கத்துடன் மனித சங்கிலி போராட்டம், உண்ணாவிரதம், பரப்புரை நிகழ்வுகள் என்று தொடர்ந்து செயல்பட்டோம், காலப்போக்கில் Save Tamils Movement என்கிற பெயரை தற்காலிகமாக சூட்டிக்கொண்டோம், இனவழிப்பு போர் முடிந்த பிறகும் தொடர்ந்து செயல்படுவதென்று முடிவெடுத்து செயல்பட்டோம். 2010 வாக்கில், தோழர் செந்தில் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், தோழர் சரவணகுமார் பொருளாளராகவும், தோழர் இளங்கோவன் செய்தி தொடர்பாளராகவும் பொதுக்குழுவிற்கு வந்திருந்தவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இயக்கம் பலரது உழைப்பு, ஆனால் கம்யூனிஸ்டு என சொல்லிக்கொள்ளும் சிபிஎம்எல் கட்சியினரும், அதில் இருக்கும் செந்தில் குழுவினரும். இது செந்தில், பரிமளாவிற்கு மட்டுமே சொந்தமான சொத்து என்ற வகையில் பேசியும், எழுதியும் வருகின்றனர்.

இளந்தமிழகம் இயக்கத்திற்கும், சிபிஎம்எல் கட்சிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. மற்ற அமைப்புகளைப் போலவே சிபிஎம்எல் கட்சியையும் நாங்கள் தோழமை அமைப்பாகவே கருதி வந்தோம்.

13. சிபிஎம்எல் மக்கள் விடுதலை கட்சி எப்பொழுது தொடங்கப்பட்டது ?

சிபிஎம்எல் மக்கள் விடுதலை கட்சி 2013 ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் செந்தில் குழுவினர் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இளந்தமிழ்கம் இயக்கத்தை 2013 ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு கட்சி தான் வழிகாட்டியது என சொல்வது நகைப்புக்குறிய ஒன்றாக உள்ளது.

14. இளந்தமிழகம் இயக்கத்திற்கும், கம்யூனிஸ்டுகளுக்குமான சண்டையா இது?

இல்லை. தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, சிபிஎம்எல் விடுதலை, மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து அரசியல், சமூக பிரச்சனைகளில் வினையாற்றி வருகின்றோம். இதை நாங்கள் குறிப்பிடுவதற்கு காரணமே இளந்தமிழகம் இயக்கத்திற்க்குள் சிபிஎம்எல் மக்கள் விடுதலை குழுவின் அமைப்பு விரோத செயல்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தை, இளந்தமிழகம் இயக்க உறுப்பினர்களுக்கும் (பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்), கம்யூனிஸ்டுகளுக்கும் இடையேயான சண்டையாக தொடர்ந்து சித்தரித்து வருகின்றார்கள்.

“மோடி அரசின் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாகுபவர்கள் தேச துரோகிகளாக முத்திரை குத்தப்படுவதற்கும், சிபிஎம்எல் மக்கள் விடுதலை கட்சியின் அமைப்பு விரோத செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்குபவர்களை கம்யூனிச எதிரிகளாக முத்திரை குத்துவதற்கும் எந்த வேறுபாடும் இல்லை”

15. செந்தில், பரிமளா உள்ளிட்ட தோழர்கள் இளந்தமிழகத்திலிருந்து நீக்கப்பட்டதற்குகாரணம் அவர்கள் கம்யூனிஸ்டு என்பதாலா? அவர்கள் அங்கும் பதவியில் இருந்தார்கள்என்பதாலா ?

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*