இந்த அறிகுறிகள் இருந்தால் அதிகம் தண்ணீர் பருகுங்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உணவுகளை விட தண்ணீரின் தேவையும் நம் உடலுக்கு மிகவும் அவசியமானது. எனவே ஒரு நாளைக்கு 7-8 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் நமது உடலிற்கு தேவையான அளவு தண்ணீர் இல்லையெனில் சில அறிகுறிகள் தென்படுவதுடன், பெரிய அளவிலான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

தண்ணீர் குறைவால் ஏற்படும் அறிகுறிகள்?
  • உடலுக்கு தேவையில்லாத வாய்வு மற்றுக் கழிவுகளை சருமம் வியர்வை மூலம் வெளியேற்றுவதால், நீரின் அளவு குறைந்து, கழிவுகள் உடலில் தங்கி, வறண்ட சருமம், முகப்பருக்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
  • மது அருந்துபவர்களுக்கு தீராத தண்ணீர் தாகம் ஏற்படும். எனவே அவர்கள் அதிக நீரை குடிக்க வேண்டும். இல்லையெனில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
  • உடற்பயிற்சி அல்லது விளையாடும் போது, உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லையென்றால், உடலின் ஆற்றல் முழுவது இழந்து, சோர்வு நிலையை அடைவதுடன், தசைகள் நீர்த்துப் போகும்.
  • ரத்தோட்டம் மற்றும் எலும்புகளுக்கு இடையே ஊட்டச்சத்துக்கள் பரிமாற்றம் தடைபட்டு, அடிக்கடி கை, கால் மற்றும் மூட்டுகளில் அதிக வலிகள் ஏற்படும்.
  • நீர்ச்சத்து குறையினால், நச்சுக்கள் மற்றும் கழிவுகள் நம் உடலிலேயே தேங்கி, அடிக்கடி நோய்வாய்ப்பட்டு துன்பப்பட நேரிடும்.
  • உடலுக்கு தேவையான நீர் இல்லையெனில், அது அதிக பசி உணர்வை ஏற்படுத்தும். அதனால் செரிமானம், அதிக உடல் எடை போன்ற பல்வேறு ஆரோக்கியமின்மை பிரச்சனைகள் ஏற்படும். 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*