இந்தியாவுடன் முதல் டெஸ்ட்: இலங்கை வீரரின் ஏமாற்றமான ரன் அவுட்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் தரங்கா ரன் அவுட் ஆன விதம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 399 ஓட்டங்கள் குவித்தது.

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணி 600 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் ஷிகர் தவான் 190 ஓட்டங்களும் மற்றும் புஜாரா 153 ஓட்டங்களும் குவித்தனர்.

இதைத் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

இப்போட்டியின் போது இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் வீசிய பந்தை கிரீசுக்கு வெளியே வந்து இலங்கை வீரர் தரங்கா அடிக்க முயன்றார்.

ஆனால் பந்தானது அவரது காலில் பட்டு, சிலிப்பில் நின்று கொண்டிருந்த அபினவ் கைக்கு சென்றது. உடனடியாக பந்தை பிடித்த அபினவ், பந்தை விக்கெட் கீப்பர் சகாவிடம் வீசினார். சகா உடனடியாக ஸ்டம்பை அடிக்க, களத்தில் இருந்த நடுவர் மூன்றாவது நடுவரை நாடினார்.

டிவி ரீப்ளேவில், தரங்கா எல்லைக்கோட்டை எட்டிய போதும் அவரது பேட் அந்தரத்தில் இருந்தது தெரியவந்தது.

நான் உள்ளே வந்து விட்டேன் என்பது போல் மற்றொரு துடுப்பாட்ட வீரரான மேத்யூசிடம் பேசிய தரங்கா அவுட் என்றவுடன் சற்றும் நம்பமுடியாத வகையிலே பவுலியன் திரும்பினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*