நடிப்பு சான்ஸ்! ஒரு நாளைக்கு ரூ 2 ஆயிரம்!

பிறப்பு : - இறப்பு :

ஜல்லிக்கட்டு போராட்டம் ஜூலிக்கு பெரும் புகழை பெற்று தந்தது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரும் எதிர்மறையான விமர்சனத்தை பெற்று தந்துள்ளது. மேலும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் தர்ம சங்கடத்தை தந்துள்ளது.

நர்சாக வேலை பார்த்த ஜூலிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும், விஜேவாக வர வேண்டும் என்பது கனவு. இதனை அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்து இருப்பார். மேலும் இதற்கு முன்பு ஆல்பம் ஒன்றிலும் நடித்து உள்ளார். அதோடு சில குறும்படங்களிலும் நடித்து உள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள திரைப்பட கல்லூரி மாணவர்கள் தனது புராஜக்டுக்காக குறும்படம் எடுப்பார்கள். அப்படி அவர்கள் எடுக்கும் குறும்படங்களில் அவர் நடித்துள்ளார். அந்த குறும்படத்திற்காக நாள் ஒன்றுக்கு ரூ 2 ஆயிரம் சம்பளமாக வாங்குவார்.

மேலும் அடிக்கடி திரைப்பட கல்லூரி மாணவர்களை சந்தித்து நடிப்பு சான்ஸ் கேட்பாரம். இதன் மூலம் திரைத்துறையில் அறிமுகம் ஆக முயற்சி செய்துள்ளார். மேலும் பல சினிமா கம்பெனிகளுக்கும் சென்று சினிமா சான்ஸ் கேட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit