கருப்பை புற்றுநோய்: யாருக்கெல்லாம் வரும் தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கருத்தடை முறைகள், மாதவிலக்கின் போது சுகாதாரமின்மை மற்றும் கிருமித்தொற்று போன்ற காரணங்களால் கருப்பை வாய் மற்றும் கருப்பை புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிறது.

கருப்பைப் புற்றுநோயின் அறிகுறிகள்?
 • உறவின் போதும் அதற்கு பின்பும் ரத்தம் வெளிப்படும்.
 • வெள்ளைப்படுதல் பிரச்சனை அதிகமாக இருக்கும்.
 • வெள்ளைப்படுதலுடன் சிறிது ரத்தமும் கலந்து வெளிவரலாம்.
 • இரண்டு மாதவிடாய்க்கு இடையில் அடிக்கடி ரத்தம் வெளிப்படும்.

இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், கருப்பைப் புற்றுநோய்க்கான பரிசோதனை செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

மேலும் அதிக ரத்தப்போக்கு, மாதவிலக்கு நேரத்தில் அதிக வலி, மாதவிலக்கு நின்ற பின் உடல் எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகளும் தென்படலாம்.

கருப்பைப் புற்றுநோய் யாருக்கு ஏற்படும்?

பரம்பரை கருப்பை புற்றுநோய், ஹார்மோன் மாற்றம், சர்க்கரை அளவு அதிகரித்தல், உடல் எடை அதிகரிப்பு இது போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு கருப்பைப் புற்றுநோய் ஏற்படும்.

கருப்பைப் புற்றுநோயிக்கு சிகிச்சை உள்ளதா?

HBV வைரஸ் மூலம் ஏற்படும் கருப்பைப் புற்றுநோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேப்ஸ்மியர் டெஸ்ட் மூலம் கருப்பை வாயில் புற்றுநோய்க்கான அறிகுறி உள்ளதா என்பதை சோதிக்க வேண்டும். பயாப்சி மற்றும் பேப்ஸ்மியர் சோதனைகள் மூலம் புற்றுநோய் கண்டறியப்படுகிறது.

கருப்பை புற்றுநோயை தடுக்க பின்பற்ற வேண்டியவை?
 • உடல்எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் உணவுகளை தவிர்த்து, தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
 • புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க, சாதத்தின் அளவைக் குறைத்து, காய்கறிகள், பழங்கள் மற்றும் ஆவியில் வேகவைத்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
 • புரதம் நிறைந்த உணவை தவிர்த்து, முட்டைக் கோஸ், காலிஃபிளவர், முளை கட்டிய பயறு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பப்பை நோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்?
 • கருப்பை கோளாறுகள் வராமல் தடுக்க, அசோகமரத்தின் பட்டையை பொடி செய்து, பாலில் கலந்து குடிக்கலாம்.
 • அசோகமரப்பட்டை, மாதுளம் பழத்தை காய வைத்து பொடி செய்து, தினமும் காலை, மாலை 3 சிட்டிகை அளவுக்கு தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.
 • ஆலமரப் பட்டையை பொடி செய்து, பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை வீக்கம் குணமாகும்.
 • அருகம்புல் வேருடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால், வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும்.
 • தினமும் காலையில் கரிசலாங்கண்ணி கீரையின் சாற்றை 30 மில்லி சாப்பிட்டு வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் குணமாகும்.
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*