நாடு திரும்பிய மிதாலி ராஜின் வேண்டுகோள் இதுதான்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

raji

இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பிய இந்திய அணி வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அணித்தலைவர் மிதாலி ராஜ், எப்போதும் இல்லாத வகையில் மக்கள் மத்தியில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

உலகக் கிண்ணப் போட்டியின் புள்ளி விபரங்களை பார்த்தால் எங்களின் தரம் உயர்ந்திருப்பதை காணலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களுக்கு ஐபிஎல் போட்டிகள் வேண்டுமா என்று கேட்டால் நானே ஆதரவு தெரிவித்திருக்க மாட்டேன்.

ஆனால் தற்போது தேவைப்படுகிறது, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய வீராங்கனைகள் உள்ளூர் போட்டிகளில் விளையாடியதன் மூலம் தேசிய அணியிலும் சிறப்பாக செயல்பட்டனர்.

ஐபிஎல் போட்டிகள் வீராங்கனைகளின் தரத்தை உயர்த்தும், இது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவை பொறுத்தது.

மேலும் வெளிநாட்டு வீராங்கனைகளுடன் பழகுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit