இலங்கை அணிக்கு அடிமேல் அடி: மேலாளர்

பிறப்பு : - இறப்பு :

இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு அணிக்கு அடிமேல் அடி விழுந்துள்ளதாக, அணியின் மேலாளர் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 399 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணியில் துவக்க வீரரான ஷிகர்தவான் சதம் கடந்து 190 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் இப்போட்டி குறித்து இலங்கை அணியின் மேலாளர் கூறுகையில், இலங்கை அணிக்கு அடி மேல் அடி என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகர்தவான் 31 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, அவர் கொடுத்த கேட்சை அசிலே குணரத்னே தவறவிட்டார்.

அந்த கேட்சை அவர் பிடிக்க முயன்ற போது, அவரது இடது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

குறைந்த பட்சம் அவர் 4 வாரங்களாவது ஓய்வு எடுக்க வேண்டும். 31 ஓட்டங்களில் ஆட்டமிழக்க வேண்டிய தவான் அதன் பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 190 ஓட்டங்கள் குவித்தார் என்று கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit