ஹேராத் சவாலை இந்திய அணியும்..அஸ்வின் பந்துவீச்சை இலங்கையும் சமாளிக்குமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு டெஸ்ட், ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் என முத்தரப்பு தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை காலே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய அணி மற்றும் இலங்கை அணியைப் பற்றிய சின்ன ரீகேப்.

இலங்கை அணி இந்தாண்டின் துவக்கத்தில் இருந்தே சற்றுத் தடுமாறி விளையாடி வருகிறது. குறிப்பிட்டு கூறினால் வங்கதேச அணியுடன் தோல்வி, ஜிம்பாப்வே அணியுடன் ஒருநாள் தொடரை இழந்தது.

ஒருநாள் தொடரைத் தான் அப்படி இழந்தது என்றால், ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரையும் அவ்வளவு எளிதாக வெல்லவில்லை.

ஜிம்பாப்வே அணி வீரர்கள் இலங்கை அணியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்தனர். இதனால் ஜிம்பாப்வே அணியே இப்படி விளையாட, இந்திய அணியை சொல்லவா வேண்டும்.

இருப்பினும் கடந்த 2015-ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணத்தின் போது, காலே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹேராத்திடம் தடுமாறியது.

அதன் பின் சுதாரித்துக் கொண்டு ஹேராத்தின் பந்து வீச்சை எளிதாக சமாளித்து ஆடியது.

அந்த தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களாக ஜடேஜா மற்றும் அஸ்வின் இலங்கை அணியை சற்றும் ஆட்டம் காண வைத்தனர். அஸ்வின் சங்ககாராவை படாதபாடு படுத்தி எடுத்து வீழ்த்தினார்

இது எல்லாம் நடந்து முடிந்த கதை, இதனால் இலங்கையில் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம், உதாரணமாக அவுஸ்திரேலியா அணி, இலங்கையிடம் 3-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதை சற்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை.

கடந்த முறை டெஸ்ட் தொடரில் அசத்திய ஹேராத் இலங்கை அணியிலும், அஸ்வின் இந்திய அணியிலும் இருப்பதால், இவர்களின் பந்துவீச்சை இரு அணியினரும் எப்படி சமாளிக்க போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

அதே போன்று இரு அணியினரும் புதிய உத்திகளை வகுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது இத்தொடர் முடிந்த பின்பு தெரியவரும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*