உலக கிண்ண இறுதிப்போட்டியில் பிரபல பாலிவுட் நடிகர் செய்த காரியம்: வைரலான புகைப்படம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

po

மகளிர் உலக கிண்ண இறுதிப்போட்டியின் போது பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், இந்திய தேசிய மூவர்ண கொடியின் நடத்தை நெறிமுறையை மீறியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த மகளிர் உலக கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

படப்பிடிப்பிற்காக லண்டனில் உள்ள அக்ஷய் குமார், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியை நேரடியாக கண்டு ரசித்துள்ளார். போட்டியின் போது, அவர் இந்திய தேசிய கொடியுடன் மைதானத்தில் இருப்பதை புகைப்படமாக எடுத்து தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் அக்ஷய் குமார், தேசிய கொடியை தலைகீழாக பிடித்து இருந்தது சர்ச்சைக்குள்ளானது. புகைப்படம் வைரலாக பல விமர்சனங்கள் எழுந்தது.

இதனையடுத்து, மூவர்ண கொடியின் நடத்தை நெறிமுறையை மீறியதிற்காக மன்னிப்பு கோரிய அக்ஷய் குமார், யாரையும் புண்படுத்த விரும்பவில்லை, படம் நீக்கப்பட்டது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit