நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து: கடைசியில் கோட்டை விட்ட இந்திய அணி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மகளிருக்கான உலகக்கிண்ணத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கெதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிருக்கான உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்து அணியும் மோதின. இப்போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தெரிவு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரராக வின்பீல்டு, பியுமோன்ட் ஆகியோர் களம் இறங்கினர்.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 43 ஓட்டங்கள் எடுத்தது.

அதன் பின் இந்திய பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். வின்பீல்டு 24 ஓட்டங்களிலும், பியுமோன்ட் 23 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

3-வது விக்கெட்டுக்கு டெய்லர் உடன் ஹீதர் நைட் ஜோடி சேர்ந்தார். நைட் 1 ஓட்டம் எடுத்த நிலையில் வெளியேறினார். அதைத் தொடந்து தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுக்களை இழந்ததால், இங்கிலாந்து அணி சற்று தடுமாறத் தொடங்கியது.

4-வது விக்கெட்டுக்கு டெய்லர் உடன் ஸ்சிவர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினார்கள்.

இங்கிலாந்து அணி 146 ஓட்டங்கள் எடுத்த போது இந்த ஜோடி பிரிந்தது. டெய்லர் 45 ஓட்டங்களிலும், அடுத்து வந்த வில்சன் முதல் பந்திலும் வெளியேறினர்.

இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஸ்சிவர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 51 ரன்கள் எடுத்த நிலையில் கோஸ்வாமி பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த ப்ருன்ட் 34 ஓட்டங்கள், ஜெனி கன் 25 ஓட்டங்கள், லாரா மார்ஷ் 14 ஓட்டங்கள் என எடுத்து கடைசி வரை போராட இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 228 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரரான ஸ்மிருதி மந்தனா டக் அவுட் ஆகி வெளியேறினார். தலைவர் மிதாலி ராஜ் 17 ஓட்டங்கள் எடுத்தபோது ரன் அவுட் முறையில் வெளியேறினார்.

அதன் பிறகு பூணம் ரவுத்தும், கவுரும் இணைந்து நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவித்தனர். இவர்களைப் பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் திணறினர்.

இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி 96 ஓட்டங்கள் குவித்தனர். இங்கிலாந்து பந்து வீச்சை பதம் பார்த்த பூணம் ரவுட் அரைசதம் விளாசினார். 75 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசினார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பூணம் ரவுட் 86 ஓட்டங்களில் வெளியேற, இந்திய அணியின் விக்கெட்டுகள் சீட்டு கட்டு போல் சரிந்தது.

ஒரு கட்டத்தில் இந்தியா தான் வெற்றி பெறும் என்று கருதப்பட்ட நிலையில், இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் அதை அப்படியே மாற்றிவிட்டனர்.

இதனால் இந்திய அணி 48.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ஓட்டங்கள் எடுத்து, 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்திய அணி சார்பிப் அதிகபட்சமாக ஹர்மன்பிரீத் (51), பூனம் ராத் (86), வேதா கிருஷ்ண மூர்த்தி (35) ஓட்டங்கள் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்து காட்டியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*