அடுத்த உலகக்கிண்ணத் தொடரில் விளையாட மாட்டேன்: மிதாலி

பிறப்பு : - இறப்பு :

இந்திய மகளிர் அணியின் தலைவரான மிதாலிராஜ், அடுத்து நடக்கும் உலகக்கிண்ணத் தொடரில் விளையாட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் மகளிருக்கான உலகக்கிண்ணத் தொடர் நடைபெற்றது.

இதில் நேற்று நடந்த இங்கிலாந்து அணிக்கெதிரான இறுதிப் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் வெற்றியை நோக்கிச் சென்ற இந்திய அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்நிலையில் இந்திய மகளிர் அணியின் தலைவரான மிதாலிராஜ், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி, அவ்வளவு எளிதாக முடியவில்லை.

இருப்பினும் அந்தணி கடினமான நேரத்தின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுவிட்டது.

எங்கள் அணியின் பேட்டிங் அனுபவம் குறைவு, இருந்த போதிலும் அவர்கள் எதிரணிக்கு எளிதாக வாய்பு வழங்கவில்லை. இந்த தொடர் அவர்களுக்கு நல்ல ஒரு அனுபவமாக இருக்கும்.

எனது எதிர்காலத்தை பொறுத்தவரை மேலும் இரண்டு ஆண்டுகள் தான் விளையாட முடியும் என்று கருதுவதால், அடுத்த உலகக்கிண்ணத் தொடரில் நான் விளையாடமாட்டேன் என்று கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit