
இவர் ஒரு தெற்றுபல் அழகி. இவர் அறிமுகமான முதல் படமே தாறுமாறு ஹிட். பாடல்களோ அதனை விட மரண ஹிட். இவரின் தோற்றத்திற்காகவே ரசிகர்கள் படத்தை விழுந்து விழுந்து பார்த்தார்கள். போதாதா பட வாய்ப்புகள் குவிந்தது.
இவரது சொந்த ஊர் தெலுங்கு தேசம். இவர் ஓய்வின்றி நடித்து கொண்டிருக்கும்போது திடீரென அவரது மாமா அக்கட தேசத்தில் இருந்து வந்தார். இவரும் ஒரு தொழில்நுட்ப கலைஞரே. நடிகையின் கால்ஷீட்டை பார்த்து கொண்டதோடு கதைகளையும் கேட்க ஆரம்பித்தார். மேலும் நடிகைக்கு பல்வேறு தொந்தரவுகள் கொடுக்க ஆரம்பித்தார்.
டூயட்டில் ஹீரோவை கட்டிபிடித்து நடிக்ககூடாது, நெருக்கமாக இருக்க கூடாது என கட்டுப்பாடுகள் விதித்தார். ஒரு படத்தில் அவர் ஹீரோவுடன் நெஞ்சோடு நெஞ்சு மோதும்படி நடித்தார். இதனை பார்த்த மாமா அவ்வளவுதான் படப்பிடிப்பு தளத்திலேயே பெரும் ரகளை செய்தார். சூட்டிங்கும் நின்றது.
மாமாவின் குடைச்சல் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. கதாநாயகர்கள் அந்த நடிகையை பார்த்தாலேயே தெறித்து ஓடினார்கள். எந்த மொழியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மாமாவை நினைத்து தனிமையில் குமுறி குமுறி அழுதார்.
இடையில் வாழ்க்கையை வெறுத்துத சன்னியாசியாக கூட ஆனார் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த நடிகையின் நிலை என்ன தெரியுமா. தெலுங்கு சீரியல்களில் அம்மா வேடத்தில் நடித்து வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.