கேரட், இஞ்சி ஜூஸ்: வெறும் வயிற்றில் குடியுங்கள்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

carad

தினசரி காய்கறிகள், பழங்கள், கீரைகள் மற்றும் தானிய உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் நம் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

அதிலும் காலையில் வெறும் வயிற்றில் சில ஆரோக்கியமான ஜூஸ்களை குடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

எனவே கேரட், இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்த்து தயாரிக்கப்படும் ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

நன்மைகள்
  • கேரட் மற்றும் இஞ்சி ஜூஸ் நம் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதோடு, உடலில் ஏற்படும் காயங்களை குணமாக்கவும் உதவுகிறது.
  • கேரட்டில் உள்ள பீட்டா-கரோட்டின் மற்றும் விட்டமின் சத்துக்கள், நம் சருமத்தின் ஆரோக்கியம் மற்றும் நமது தோல் மேம்பாட்டிற்கு உதவும் கொல்லாஜின் உற்பத்திக்கும் உதவுகிறது.
  • கேரட்டில் உள்ள ஆல்பா கரோட்டின், பீட்டா கரோட்டின் போன்ற மூலப் பொருட்கள் இதய நோய்கள், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயங்களை தடுக்கிறது.
  • இஞ்சி மற்றும் கேரட் கலந்த ஜீஸில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள், ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் தடுக்க உதவுகிறது.
  • நீரிழிவு மற்றும் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை தடுத்து, இன்சுலின் அளவை சீராக்க, இஞ்சியை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.
  • இஞ்சி, கேரட் மற்றும் மஞ்சள் சேர்ந்த ஜூஸில் விட்டமின் A, C ஆகியவை நிறைந்துள்ளதால், அது நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit