குழந்தை வேண்டவே வேண்டாம்.. கணவரை கட்டுப்படுத்த டாக்டரிடம் சென்ற இளம்பெண்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எனக்குத் திருமணமாகி ஒரு ஆண்டுதான் ஆகிறது. எனவே குடும்பச்சூழல் காரணமாக நாங்கள் குழந்தையே வேண்டாம் என முடிவு செய்திருக்கிறோம்.

சித்த மருத்துவத்தில் குழந்தையில்லாமல் இருப்பதற்கு சிகிச்சை முறைகள் இருக்கா டாக்டர்? பெயர் மற்றும் ஊர் வெளியிடாத திருவண்ணாமலையை சேர்ந்த வாசகி.

டாக்டரின் அறிவுரை:

நீங்கள் நினைக்கின்ற மாதிரி குழந்தையே பிறக்காமல் இருக்க தற்போது சிகிச்சைகள் ஏதும் கிடையாது. பாதுகாப்பான நாட்கள் என்று சொல்லக் கூடிய நாட்களில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது ஒன்றுதான் இதற்கான வழி.

அதாவது மாதவிலக்கான 9வது நாள் முதல் 18ம் நாள் வரை தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பத்தை வேண்டும் தள்ளிப்போட மருந்து மாத்திரைகள் உண்டு.

அவை சில மாதங்கள் சாப்பிடுவதற்கு மட்டுமே தவிர, நீண்ட காலத்துக்கு எடுத்துக் கொள்கிற பட்சத்தில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். கரு உருவாகாமல் பாதுகாப்பாக இருக்க முடிந்த அளவு பாருங்கள்.

ஒரு வேளை கரு உண்டான பிறகு அதை அழிக்க முயற்சி செய்யாதீர்கள்.
என் மருத்துவ அனுபவத்தில் முதல் குழந்தை வேண்டாம் என அதை அபார்ஷன் செய்தார் ஒரு பெண்ணுக்கு 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை தங்காமலே போய்விட்டது. இதற்காக பல சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருகிறார்.

இப்போது குழந்தையே வேண்டாம் என நினைக்கிற நீங்கள் பிற்காலத்தில் மனம் மாறலாம். குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதிக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைத்து விட்டால்? எனவே முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*