பிளம்ஸ் பழத்தின் அசத்தலான பலன்கள்: தோலுடன் சாப்பிடுங்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையை கொண்ட சிவப்பு நிறமுள்ள பிளம்ஸ் பழத்தில் பொட்டாசியம், ஃபுளோரைடு, இரும்புச்சத்து, விட்டமின் A, C, K, பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் உள்ளது.

பிளம்ஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
  • பிளம்ஸ் பழம் சாப்பிடுவதால், அது ரத்தம் உறைதல், ரத்தத்தை விருத்திக்கு உதவுவதுடன், ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைத்து, சிவப்பணுக்களை அதிகரிக்கிறது.
  • சிறுநீரகக் கோளாறுகளை நீக்கி, தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து, மென்மையாக்கி, மூளை நரம்புகளின் பலத்தை அதிகமாக்கி, மனஅழுத்தத்தைக் குறைக்கிறது.
  • கண்பார்வையை கூர்மையாக்கி, செரிமான செயல்பாட்டை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
  • நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, நோய்த் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும் சளித்தொல்லை மற்றும் நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • பிளம்ஸ் பழங்களைத் தோலுடன் சாப்பிட்டால், அது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், முதுமைத் தோற்றத்தை தடுத்து, புத்துணர்ச்சியை அளிக்கிறது.
  • பிளம்ஸ் பழத்தின் சதைகளை மட்டும் தனியாக எடுத்து, நிழலில் உலர்த்தி, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
  • பிளம்ஸ் பழத்தில் உள்ள ஃபிளேவனாய்டுகள், எலும்புத் திசுக்களின் சிதைவுகளை தடுத்து, ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.
  • பிளம்ஸ் பழத்தில் உள்ள எபிக்கேட்சின் (Epicatachin) எனும் மூலக்கூறு வீரியமிக்க புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, கல்லீரல் மற்றும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*