பிறந்த திகதி போதும் காதல் உறவில் உங்களின் ரகசியம் இதுதான்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிறந்த திகதியை வைத்து நீங்கள் காதல் உறவில் எப்படி இருப்பீர்கள், உங்களுக்கு காதலில் பொருத்தம் உள்ளதா? என்பதை தெரிந்துக் கொள்ள முடியும்.

மேஷம் (மார்ச் 21-ஏப்ரல் 19)

உங்களுக்கு காதலின் ஆரம்பமே பிரச்சினை தான். ஆனால் உங்கள் லைஃப் பார்ட்னர் மீது அதிக அன்பை செலுத்து, அவர்கள் எது கேட்டாலும் செய்து தருவீர்கள். ஆனால் அவர்கள் மீது வைத்துள்ள அன்பு போல பொஸஸிவாகவும் இருப்பீர்கள்.

மென்மையான, சந்தோஷமான உங்களின் காதல் உறவில், பொருத்தமான காதல் பார்ட்னர் உள்ள ராசிகள் துலாம், மிதுனம், கும்பம், சிம்பம், தனுசு போன்றவை ஆகும்.

ரிஷபம் (ஏப்ரல் 20-மே 20)

நீங்கள் உண்மையாக காதலில் கில்லாடிகள் தான். தங்கள் காதல் பார்ட்னருடன் அளவு கடந்த நெருக்கத்துடன் இருப்பார்கள்.

ஆனால் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதால், நெருக்கமாக பழகுவதற்கு, ஒரு குறிப்பிட்ட எல்லையை பின்பற்றுவார்கள். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் உள்ள ராசிகள் கடகம், கன்னி, மகரம், மீனம்.

மிதுனம் (மே21-ஜீன் 20)

உங்களை பொருத்த வரை காதல் உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், நேராக பார்த்து பழகுவதை விட பேசிப் பழகுவதை அதிகம் விரும்புவீர்கள்.

ஆனால் ஒரே பார்ட்னருடன் நீண்ட காலம் இருக்க வேண்டும் என்ற தீர்மானம் மட்டும் உங்களுக்கு இருக்காது. உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் உள்ள ராசிகள் மேஷம், தனுசு, துலாம், சிம்பம், கும்பம் போன்றவை ஆகும்.

கடகம் (ஜீன் 21-ஜூலை 22)

உணர்ச்சிபூர்வம் மிக்க நீங்கள் காதல் உணர்ச்சிகளுக்கு மிகவும் மதிப்பு கொடுப்பவராகவும், காதலில் நேர்மையாகவும் நடந்துக் கொள்வீர்கள்.

லவ் பார்ட்னரின் மனதில் உள்ள அன்பை புரிந்து கொண்டு அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் உள்ள ராசிகள் ரிஷபம், மீனம், கன்னி, விருச்சிகம், மகரம் போன்றவை ஆகும்.

சிம்மம் (ஜூலை 23 – ஆகஸ்ட் 22)

நீங்கள் காதலில் அதிக உணர்ச்சி வாய்ந்தவராக இருப்பீர்கள். காதலில் நீங்கள் ஒரு விசுவாசமான, ஜாலியான மற்றும் மரியாதைக்குரியவராக நடந்து கொள்வீர்கள்.

தங்களது தேவைகளை பூர்த்தி செய்து காதலை வெளிப்படுத்தும் ஜோடியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் ராசிகள் துலாம், மேஷம், மிதுனம், தனுசு போன்றவை ஆகும்.

கன்னி (ஆகஸ்ட் 23-செப்டம்பர் 22)

காதலில் மிகவும் மென்மையான நீங்கள் தங்கள் பார்ட்னர் தங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதை விரும்புவீர்கள். காதல் உறவில் மிகுந்த பற்றுடன், நிலையான உறவை மட்டுமே விரும்புவீர்கள்.

காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தத்துடன் தனது பார்ட்னர் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புன் நீங்கள், ஒருவருடன் மட்டுமே வாழ்க்கை முழுவதும் காதலுடன் வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள்.

உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் உள்ள ராசிகள் விருச்சிகம், மீனம், மகரம் , ரிஷபம், கடகம் போன்றவை ஆகும்.

துலாம் (செப்டம்பர் 23-அக்டோபர் 22)

நீங்க நீண்ட காலம் தேடி தங்களின் லைஃப் பார்ட்னரை தேர்ந்தெடுப்பீர்கள். நீங்கள் ஒருமுறை காதல் உறவில் விழுந்து விட்டால் உண்மையான அன்புடன் காதல் கொள்வீர்கள்.

காதல் உறவில் வெளிப்படையான அன்பு கொண்ட உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் உள்ள ராசிகள் கும்பம், தனுசு, மிதுனம், சிம்பம் போன்றவை ஆகும்.

விருச்சிகம் (அக்டோபர் 2 3 – நவம்பர் 21)

காதல் உறவில் மிகவும் நெருக்கமாகவும் உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் உண்மை அன்பை வெளிப்படுத்தும் மற்றும் அறிவாளியான பார்ட்னரையே விரும்புவீர்கள்.

தங்கள் பார்ட்னரை நன்றாக புரிந்து வைத்துக் கொள்ளும் உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் உள்ள ராசிகள் மீனம், கடகம், மகரம்,கன்னி போன்றவை ஆகும்.

தனுசு (நவம்பர் 22 – டிசம்பர் 21)

ஒரு ஜாலியான காதல் வாழ்க்கையை வாழ விரும்பும் நீங்கள், தங்களின் பார்ட்னர் வெளிப்படையாகவும், தங்களை போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.

இந்த பூமியில் வாழும் வரை சந்தோஷமாகவும், எதிர்பார்த்த அனைத்தையும் கொடுத்து காதல் கொள்ள வேண்டும் என்று விரும்பும் உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் உள்ள ராசிகள் விருச்சிகம், மேஷம், துலாம், மகரம், சிம்பம் போன்றவை ஆகும்.

மகரம் (டிசம்பர் 22 – ஜனவரி 19)

காதல் உறவில் உங்களின் மனதை வெல்வது சாதாரண விடயம் கிடையாது. அப்படி இருக்கும் நீங்க காதலில் விழுந்து விட்டால் வாழ்க்கை முழுவதும் உங்களின் பார்ட்னருக்காகவே வாழ்வீர்கள்.

ஆனால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத முரட்டுத்தனமாக இருக்கும் உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் உள்ள ராசிகள் மீனம், கன்னி, விருச்சிகம், ரிஷபம் போன்றவை ஆகும்.

கும்பம் (ஜனவரி 20- பிப்ரவரி 18)

காதல் உறவில் தூண்டுபவராகவும், வாய்வழி உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும் உள்ள உங்களை கவர்வதற்கு வெளிப்படையாக இருத்தல், பேச்சு தொடர்பு, பிரச்சனை சமாளித்தல், மற்றும் கற்பனை போன்றவை குணங்களை எதிர்பார்ப்பீர்கள்.

நேர்மையான காதல் வாழ்க்கையை விரும்பும் உங்களுக்கு, பொருத்தமான காதல் பார்ட்னர் உள்ள ராசிகள் மேஷம், துலாம், மிதுனம், தனுசு போன்றவை ஆகும்.

மீனம் (பிப்ரவரி 19-மார்ச் 20)

காதல் உறவில் ரொமாண்டிக்காக இருக்கும் நீங்கள் ஒரு நேர்மையான துணையை விரும்புவீர்கள். ஆனால் உங்களுக்கு குறுகிய கால காதல் உறவுகள் பிடிக்காது. உண்மையான காதலுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

அதுவும் தங்களுக்கு சமமான பார்ட்னரை தேர்ந்தெடுக்க முடியாத உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் உள்ள ராசிகள் மகரம், கடகம், விருச்சிகம், தனுசு போன்றவை ஆகும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*