முட்டை சாப்பிட்டால் பால் குடிக்கலாமா?

பிறப்பு : - இறப்பு :

ஆரோக்கியமான உணவு என்றால் முதலில் நம் கண் முன் வருவது பால் மற்றும் முட்டை தான். புரதச்சத்து நிறைந்த முட்டை மற்றும் பாலை சாப்பிட்டால், நம் வயிறு நிறைந்தது போன்ற உணர்வுகள் ஏற்படும்.

அதனால் தான் முட்டை சாப்பிட்டு விட்டு ஒரு டம்ளர் பால் குடிக்கும் பழக்கத்தை அனைவரும் பின்பற்றி வருகின்றனர். ஆனால் முட்டை மற்றும் பால் சாப்பிடும் இந்த உணவு பழக்க முறையில் ஒரு வரையறை உள்ளது.

முட்டையை பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து?

வேகவைக்காத பச்சை முட்டையை சாப்பிட்டால், அது சில நேரத்தில் பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

வேகவைக்காத முட்டையை பாலில் கலந்து சாப்பிட்டால், அது வயிற்று உப்பிசம் வாய்வு பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

எனவே பச்சையாக முட்டையை சாப்பிடும் போது, அதை எந்த உணவுடனும் சேர்த்து சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதனால் பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.

வேகவைத்த முட்டையுடன் பால் குடிக்கலாமா?

வேகவைத்த, பொரித்த முட்டையை சாப்பிட்டால், பால் குடிக்கலாம். ஆனால் வேகவைக்காத பச்சை முட்டையை சாப்பிட்டால், மட்டும் கண்டிப்பாக பால் குடிக்கக் கூடாது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit