விண்வெளி நோக்கியும் விஸ்வரூபம் எடுக்கும் Google Map Street View!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலகின் பல பகுதிகளையும் படம் பிடித்து அங்குள்ள வீதிகளில் இலகுவாக பயணம் செய்யக்கூடிய வசதியை Google Map Street View தருகின்றது.

இதனைத் தொடர்ந்து விண்வெளியிலும் காலடி பதிப்பதற்கான முயற்சிகளில் கூகுள் மேப் இறங்கியுள்ளது.

முதற்கட்டமாக சர்வதேச விண்வெளி நிலையத்தினை கூகுள் மேப்பில் இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் 360 டிகிரியிலான புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகின்றனர்.

2015 ஆம் ஆண்டில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமானது முதன் முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஊடாடு முறையில் (Interactive) பயணம் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு அடுத்தபடியாக நாசா நிறுவனம் செவ்வாய் கிரகத்திற்கு மாயத்தோற்ற முறையில் (Virtual Reality) பயணம் செய்யும் வசதியை உருவாக்கியது.

இதனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனத்தின் முயற்சியினால் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் கூகுள் மேப்பில் இணைக்கப்படுவது விண்வெளி ஆய்வின் மற்றுமொரு புரட்சியாக கருதப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*