
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சர்ச்சை சுப்பிரமணிய சாமியால் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய அமைச்சராக இருந்த சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014-ம் ஆண்டு மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார்.
அமைச்சரின் மனைவி இறப்பில் மர்மம் இருப்பதாக சந்தேகங்கள் கிளம்பியதை அடுத்து ஆரம்ப கட்டத்தில் இதுதொடர்பான விசாரணை சற்று வேகமாக இருந்தது. ஆனால் போகப்போக கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய ஆதாரங்கள் அழிக்கப்படுவதாகவும் காலம் தாழ்த்தும் பட்சத்தில் நீதி கிடைக்காது எனவும் எனவே விரைந்து இந்த விசாரணையை நடத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதன்மூலம் கிடப்பில் போடப்பட்ட அமைச்சரின் மனைவி மரண வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.