மயானங்களை அகற்றக் கோரி யாழில் 7வது நாளாகவும் தொடரும் போராட்டம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யாழ். குடாநாட்டில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்றக் கோரி ஆரம்பமான மாபெரும் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று ஏழாவது நாளாகவும் தீர்வின்றி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த புதன்கிழமை யாழ். புத்தூர் மேற்கு கலைமதி கிராம மக்கள் மண்டபத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

வடக்கு மாகாண சபையே! மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்று’, ‘மக்களின் வாழ்விடச் சூழலைப் பாதுகாத்துக் கிராமியக் கட்டமைப்பை வலுப்படுத்து’ எனும் தொனிப்பொருளில் குறித்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்றைய போராட்டத்தில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்றுமாறு வலியுறுத்தினர்.

அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட 12பேர் கொண்ட குழு, விதை குழுமத்தின் செயற்பாட்டாளர்கள் கொண்ட குழு, பிரான்ஸ்நாட்டைத் தளமாகக் கொண்டு செயற்படும் புலம்பெயர் அமைப்பான ‘வடு’, கனடாவைத் தளமாகக் கொண்டு செயற்படும் புலம்பெயர் அமைப்பான ‘தேடகம்’ ஆகிய அமைப்புக்களின் பிரதிதிகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டக்களத்திற்கு நேரடியாகச் சென்று குறித்த போராட்டத்திற்குத் தமது பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலையும், நேற்றுத் திங்கட்கிழமை மாலையும் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் போராட்டக் களத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ள போதும், ஏனைய பொறுப்பு வாய்ந்த அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் தமது போராட்டத்தைக் கண்டுகொள்ளாமை தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*