ஓவியாவை பற்றி முழுக்க முழுக்க இதோ!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஒரு நபர் நேர்மையாக, உண்மையாக, நியாயமாக நடந்துக் கொண்டால், இந்த உலகம் என்ன கூறும் தெரியுமா? பழம், அட்டு, வேஸ்ட் பீஸ். பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் போல கூற வேண்டும் என்றால் Fake! ஒவ்வொரு நண்பர் கூட்டத்திலும் இப்படி ஒரு நபர் இருப்பார். மனதில் பட்டதை வெளிப்படையாக கூறி கேலிக்குரிய நபராக வாழ்ந்து வருவார்.

ஒருவர் நேர்மையாக இருந்தால் அவரை ஒதுக்கி தள்ள வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் உலகெங்கிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. பிக் பாஸ் வீட்டில் இப்படி ஒரு நபராக காணப்படுபவர் ஓவியா. நிஜ வாழ்வில் இப்படிப்பட்ட நபர்கள் பலரை நீங்கள் கடந்து வந்திருப்பீர்கள். ஏன் பலரும் உங்களையும் இப்படி கடந்து சென்றிருக்கலாம்.

ஒரு நபர் நேர்மையாக, உண்மையாக நடந்துக் கொள்வதால் இந்த சமூகத்தில் எதிர்க்கொள்ளும் விஷயங்கள் என்னென்ன என்று தெரியுமா? என்னதான் நல்ல உழைப்பாளி, திறமையானவர் என்ற பெயர் இருந்தாலும். தன்னை சுற்றி நடக்கும் தவறுகளை, நல்லவற்றை நேராடியாக அவர் கையாளும் போது. சிறுபான்மையர் (நல்லவர்களும் சிறுபான்மையார்களாக தானே இருக்கிறார்கள்) என்ற காரணத்தால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உதவிகள், பதவிகள், உரிமைகள் கிடைக்காமல் போகும்.

நால்வர் மத்தியில் நீங்கள் மட்டும் நல்லவராக, உண்மை விளம்பியாக இருந்தால், அந்த நால்வரில் நீங்கள் மட்டும் தனித்துவிடப்பட்டு இருப்பீர்கள். இந்த உலகம், நமது சமூகம் நல்லவர்களை எப்போதும் தனிமைப்படுத்தி தான் வைக்கும். ஆனால், அவரவர் வாழ்வில் கேடு, கெட்டது நடந்தால் உடனே இவர்களை தேடி சென்று அழுது, புலம்பி அறிவுரை கேட்பார்கள்.

நாம் கூறியது போலவே, ஒரு பிரச்சனை என்றால் முதல் உதவி இவர்களை நாடுவதாக தான் இருக்கும். ஆம், இவர்கள் தெளிவான அறிவுரை வழங்குவார்கள். இவர்கள் கூறுவதற்கு இரண்டாம் பேச்சு இருக்காது. இவர்கள் பார்வை சிறந்ததாக இருக்கும் என தாங்கள் கீழே விழுந்த பிறகு, சோகத்தில் மூழ்கிய பிறகே மற்றவர் உணர்வார்கள்.

ரசிகர் என்பதை காட்டிலும், பின்தொடரும் ஃபாலோவர்ஸ் என கூறலாம். நண்பர்கள் குறைவாக இருந்தாலும், இவர்களுக்கு ஃபாலோவர்ஸ் அதிகமாக இருப்பார்கள். உடன் இருக்காவிட்டாலும், தொலைவில் இருந்து இவர்களை அப்சர்வ் செய்துக் கொண்டே இருப்பார்கள். உயிருடன் இருந்த வரை கொண்டாடாத உலகம், இந்த உண்மையாவர்கள் இறந்த பிறகு மெச்சி, மெச்சி பேசும், “அவன் எவ்வளவோ நல்லவன் தெரியுமா?

அப்பவே அவன் அதெல்லாம் சொன்னான், யாரு கேட்டா?” என புலம்புவார்கள். உயிருடன் இருக்கும் போது இருந்த உறவுகளை காட்டிலும், இறந்த பிறகு இவர் பெயர் கூறி வாழும் உறவுகள் அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட உண்மையாவர்களுடன் வாழ்வதால் சில நன்மைகளும் கிடைக்கும். ஆம், சிலர் போலியாக நம்மை அட்ஜஸ்ட் செய்து கொண்டு உடன் இருப்பார்கள். ஆனால், இவர்கள் மட்டும் தான் நீ செய்வது தவறு, இதை திருத்திக்கொள் என ஆரம்பித்திலேயே நமது தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பளிப்பார்கள்.

உண்மையாக இருப்பதால் உறவுகள் குறைவாக இருந்தாலும், யாருடனும் எந்த ஆதாயமும் தேடாமல், யாருடனும் அட்ஜஸ்ட் செய்துக் கொண்டு போலியான வாழ்க்கை வாழாமல், நாம் சுதந்திரமாக, நிம்மதியாக, நம்மை நூறு சதவிதம் விரும்பி நம்முடன் வாழும் மக்களுடன் சேர்ந்து இனிமையாக வாழலாம். உண்மையாக, நேர்மையாக இருப்பவர்கள் செய்யும் ஒரே தவறும், “அவன் சொன்னாலும் கேட்க மாட்டான். சொல்லி எந்த பிரயோசனமும் இல்லை” என தெரிந்தும்… தானாக மூக்கை நுழைத்து வாங்கிக் கட்டிக்கொள்வது தான். இதை ஒன்றை மட்டும் தான் அவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். சிலர் கேட்டு திருந்துவார்கள், சிலர் பட்டுதான் திருந்துவார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*