பயிற்சியாளர்கள் தேர்வில் பிரச்சனை: சச்சின் மற்றும் கங்குலி வேதனை!

பிறப்பு : - இறப்பு :

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் குறித்து வெளியாகும் உண்மைக்கு மாறான தகவல்கள் தங்களை புண்படுத்தியிருப்பதாக சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோர் கூறியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அதே போல பந்துவீச்சு ஆலோசகராக ஜாகீர்கானும், வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கான ஆலோசகராக ராகுல் டிராவிட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஆலோசனை குழுவில் உள்ள சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோர் கூறுகையில், பயிற்சியாளர்கள் நியமனம் குறித்து வெளியாகும் உண்மைக்கு மாறான தகவல்கள் தங்களை புண்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ரவி சாஸ்திரி மற்றும் கிரிக்கெட் வாரிய நிர்வாகி வினோத் ராய் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பின்னரே ஆலோசகர்கள் அனைவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய வினோத் ராய், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ஊதியம் எதுவும் பெறாமல் பயிற்சியாளர் தேர்வை நடத்தியது பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit