முதல் முறை ரத்தம்! கன்னித் தன்மைக்கு அடையாளம் இதுவா? வயது வந்தவர்கள் மட்டும்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

peri

முதல்முறை உடலுறவு கொள்ளும் போது, பெண்களுக்கு ரத்தம் வடிந்தால் தான் அவர் கன்னிப் பெண்ணாம்.

இல்லாவிட்டால் அவர் ஏற்கனவே கன்னி கழிந்தவர் என்ற மனநிலை பலரிடம் உள்ளது.

வட இந்தியாவில் சில மாநிலங்களில் புதுமண தம்பதிக்கு முதலிரவின் போது, வெள்ளை போர்வை ஒன்றை கொடுப்பார்கள். அந்த போர்வையை விரித்து தான் முதலிரவை கொண்டாட வேண்டும்.

காலையில் அந்த போர்வையை எடுத்துப் பார்ப்பார்கள். அதில் ரத்தம் இருக்க வேண்டும்.

அப்போது தான் அந்த மணப் பெண் உத்தமி. அதாவது அதற்கு முன் யாருடனும் உடலுறவு கொள்ளவில்லை என அர்த்தம்.

ஆனால் இது தவறான நம்பிக்கை ஆகும். பெண் உறுப்பின் முன்பகுதியில் ஒரு கடினமான தசைப்பகுதி (hymen) இருக்கும். அந்த பகுதி முதலிரவின் போது, விரிவடையும்.

அப்படி விரிவடையும் போது, அதில் இருந்து ரத்தம் வடியும். எல்லா பெண்களுக்கும் இப்படித் தான் இருக்கும் என்ற கட்டாயம் இல்லை.

சில பெண்கள் அதிகமாக சைக்கிள் ஓட்டுவதாலும், அல்லது அதிகமாக ஓடும் பழக்கம் உடையவர்களாக இருந்தால், அவர்களுக்கு அந்த சவ்வானது ஏற்கனவே விரிவடைந்து தான் இருக்கும்.

முதலிரவின் போது அந்த பெண்களுக்கு ரத்தம் வராது.

அதே போல் முதல்முறை வலி ஏற்படும் என்ற கருத்து பெண்களை அச்சுறுத்துவதாகவும், மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதுவும் தவறான கருத்தாகும். அதே நேரம் வலி ஏற்படலாம். அதனை தவிர்க்க ஒரே வழி ஆண்கள் மென்மையாக நடந்து கொள்வது தான் என்பதும் மருத்துவர்களின் அறிவுரை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit