சுவிற்சர்லாந்து ஶ்ரீ விநாயகர் ஆலயம் லங்னவ் தேர்த்திருவிழா 2017 (படங்கள், காணொளி இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சுவிஸ் நாட்டின் லங்னவ் மாநகரில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீ விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா பல பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிகழ்வுற்றது. சுவிற்சர்லாந்து நாட்டிலே முதல் முதலாக நிறுவப்பட்ட இந்து ஆலயம் இதுவாகும். இவ்வாலயத்தில் ஒவ்வொரு வருடங்களும் வருடாந்த உற்சவம் மாத்திரம் நடைபெற்றுவந்த இவ்வாலயத்தில்   கடந்த இரண்டு வருடங்களாவே தொடர்ந்து ரதோற்சவ திருவிழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கண்களை கவரும் வண்ணத்தில் தோற்றமளிக்கும் இவ் ஆலயத்தில் தேர்த்திருவிழா தினத்தன்று, அபிசேக ஆராதனைகள் மற்றும் வசந்தபண்டப பூசை, தீபாராதனை என்பன நிறைவுற்றதும் ஆலயத்தின் விநாயகர் எழுந்தருளி வலம் வந்து அழகிய தேரிலே ஆரோகணித்தார்.

மேலும் இந்நிகழ்வில் சுவிற்சலாந்து நாட்டில் பல பாகங்களில் இருந்து வருகை  தந்த மக்கள், பாற்செம்பு, காவடி,தீச்சட்டி என்பனவற்றை  ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். மற்றும் நேர்காணல்களும்  பல சிறப்பம்சங்களையும்  எமது காணொளியில் பார்வையிடுவதை தவறவிடாதீர்கள்.

மேலும் முழு வீடியோ மற்றும் படங்களை கீழே இருக்கும் இணைப்பினூடாக காணக்கூடியதாக இருக்கும்.

படங்கள் இங்கே பார்க்கலாம்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*