பணம் கொடுத்து தான் உலகக்கோப்பையை வென்றார் தோனி? கிளம்பியது புது சர்ச்சை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

doni

2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மேட்ச் பிக்ஸிங் நடைபெற்றுள்ளது என்று முன்னாள் இலங்கை கேப்டன் ரணதுங்கா மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2011ல் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணியை வீழ்த்திய தோனி தலைமையிலான இந்திய அணி உலக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்திய அணி உலகக்கோப்பையை வென்று கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் நிறைவடைந்து அடுத்த உலக்க்கோப்பையே வர உள்ள நிலையில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

2011 உலகக்கோப்பையின் போது கேப்டனாக இருந்த சங்ககரரா, சமீபத்தில், கடந்த 2009ல் வீரர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாமல், எப்படி பாகிஸ்தானுக்கு செல்ல இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் ஒப்புக்கொண்டது என விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.

சங்ககாராவின் இந்த கருத்தால் கடுப்பான முன்னாள் கேப்டன் ரணதுங்கா அளித்துள்ள பதிலில்,’ 2011 உலகக் கோப்பை இறுதிபோட்டியில் என்ன நடந்தது என நான் தற்போது கூற விரும்பவில்லை. ஆனால் ஒரு நாள் ஆதாரத்துடன் நிரூபிப்பேன்.’ என்று கூறியுள்ளார்.

2011 உலகக்கோப்பையின் இறுதி போட்டியில் மேட்ச் பிக்சிங் மூலமே இந்திய அணி வெற்றி பெற்றது என்பதை ரணதுங்கா மறைமுகமாக கூறியுள்ளதால் இது கிரிக்கெட் வட்டாரத்தில் புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit