சசி குரூப் அதிகாரியை வளைத்தது எப்படி திடுக் தகவல்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களுரு பரப்பான அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.

சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட முதல் ஒரு வாரத்தில் சிறைத்துறை அதிகாரி சத்திய நாராயண ராவ் மிகக் கடுமையாக நடந்து கொண்டார்.

இரண்டாம் நாள் வெளியில் இருந்து கொண்டு வந்த உணவை பிடுங்கிக் கொண்டார். மருந்துகளைக் கூட கொடுக்கக் கூடாது என்று மிகப்பெரிய ஆட்டம் காட்டினார்.

இப்படியே போனால் சிறையில் இருந்து சசிகலா நடை பிணமாகத்தான் வருவார் எனப் பயந்தனர் அவரின் உறவினர்கள்

இந்த நிலையில் நேர்மை அதிகாரியாக நடந்து கொண்ட அந்தச் சிறைத்துறை அதிகாரியை வலைக்க பெங்களுரு அதிமுக பொறுப்பாளர் மூலம் வலை வீசப்பட்டது.

சிறைத்துறை அதிகாரி ஒருவர், பெங்களுரு, ஹைதராபாத், துபாய் ஆகிய ஊர்களில் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவது தெரிந்தது.

இதனையடுத்து அதிகாரியின் நண்பர்களை மடக்கிய சசி உறவினர் ஹைதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டத்தில் முதல் கட்டப் பேச்சு வார்த்தையைத் தொடங்கினர்.

பேச்சு வார்த்தையில் சிறைத்துறை அதிகாரிசார்பாக அவரின் பெங்களுரு நண்பர் கலந்து கொண்டார்.

சிறைத்துறை அதிகாரிக்கு பெங்களுரு எலக்ட்ரானிக் சிட்டியில் 70 லட்சத்திற்கு பிளாட்டும், பெரிய தொகை ஒன்றும் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன் பின்புதான் சிறையில் சசி சுதந்திரமாக வலம் வந்தார். சிறையில் சசிகலாவுக்கு சமைத்துக் கொடுக்க சசியின் சமையலரே சிறைக்கு வந்துள்ளனராம்.

பின்பு என்ன சசிக்கு சிறையில் சொகுசு வாழ்க்கைதான். இந்த நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை. துபாய் நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தப் பேச்சு வார்த்தை பெங்களுருவில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் நடந்தது. இதிலும் பெரிய தொகை பேசப்பட்டு, திராட்சை தோட்டத்தில் வைத்து பணம் கைமாறியதாக் கூறப்படுகிறது.

பணத்தைப் பெறுவதற்காக அந்த அதிகாரி ஹைதராபாத்திற்குப் பல முறை விமானத்தில் பயணம் செய்தாராம் அதுக்கான ஆதாரங்களும் அந்தப் பெண் அதிகாரி கையில் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சசிகலா எங்க போனாலும், யாரையும் வளைக்கும் திறமை படைத்தவர் என்று அதிமுகவினரால் பாராட்டப்படுகிறார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*