ஓவியர் வீரசந்தானம் ஐயாவின் மறைவு ஈழ ஆதரவு போராட்டக்களங்களில் இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பு! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

santhanam-aiyaa

தமிழீழ விடுதலையை உளமாற நேசித்து தனது மூச்சாக வாழ்ந்துவந்த ஓவியர் வீரசந்தானம் ஐயாவின் மறைவு தமிழ்நாட்டில் நடைபெறும் ஈழ ஆதரவு போராட்டக்களங்களில் இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பாகும்.

சுதந்திர தமிழீழமெனும் உண்ணத இலட்சியத்தை வென்றெடுக்கும் போராட்டத்தில் தமிழ்நாடு தளராத நிலைகொண்டு பக்கபலமாக செயலாற்றி வருகின்றது. அவ்வாறான பெருமைமிகு அத்தியாத்தில் என்றென்றும் மரியாதையுடன் நினைத்துப் பார்க்கும் உயர்ந்த மனிதராக வீரசந்தானம் ஐயா திகழ்வார் என்பது உறுதி.

நெஞ்சத்தில் இருக்கும் எண்ணங்களை தூரிகை கொண்டு உணர்வோடு படைப்புக்களாக்கி எழுச்சிமிகு தடம்பதித்த ஓவியர் வீரசந்தானம் ஐயாவின் மறைவால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழீழ ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் வீரசந்தானம் ஐயாவின் ஆத்மா அமைதிபெறவும் வேண்டுகிறோம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit