காரில் மாட்டிக் கொண்ட உயிர்கள்: துணிச்சலோடு காப்பாற்றிய முதியவர்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அசார்பைசான் நாட்டில் கார் விபத்தின் போது, காரின் உள்ளே சிக்கி கொண்டவர்களை முதியவர் ஒருவர் துணிச்சலோடு காப்பாற்றிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Azerbaijan நாட்டின் தலைநகரமான Baku பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் Lada கார் சென்றுள்ளது.

அப்போது அதன் பின்னே வந்த Volga என்ற கார் திடீரென்று முன்னே சென்று கொண்டிருந்த அந்த காரின் மீது மோதியுள்ளது.

இதனால் Lada காரின் பின்புறம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், அருகில் இருந்த சிலர் உடனடியாக காரில் இருந்தவர்களை மீட்க வந்த போது, தீ அதிகம் எரிந்ததைத் தொடர்ந்து, அவர்கள் ஓடி விட்டனர்.

காரின் உள்ளே இருந்தவர்களும் வெளியே வர முயற்சி செய்த போது வெளியில் வரமுடியவில்லை.

அப்போது அங்கிருந்த முதியவர் ஒருவர் துணிச்சலாக வந்து, காரின் ஜன்னல்களை தன்னுடைய காலால் உடைத்து காரின் உள்ளே இருந்த நபர்களை மீட்டார். அதன் பின் வந்த சிலர் காரின் ஜன்னல்களை உடைத்து மற்றவர்களை காப்பாற்றினர்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானதால், அந்த முதியவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*