வங்கி ஊழியர்களுக்கு வினோதமாக பாடம் புகட்டிய ரஷ்யர்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வாடிக்கையாளர்களுக்கு எப்படி மதிப்பளிக்க வேண்டும் என்பதை, வங்கி ஊழியர்களுக்கு இரண்டு அழகிகளுடன் வந்து ஒருவர் பாடம் புகட்டியுள்ளார்.

ரஷ்யாவில் உள்ள மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று ஸ்பெர்பேங்க். இந்த வங்கியின் கிளை ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ளது.

இந்த வங்கியில் ஒருவர் கணக்கு வைத்துள்ளார். இவர் அடிக்கடி வந்து பண பரிமாற்றம் செய்துள்ளார். அப்போது வங்கி ஊழியர்கள் நடந்துகொண்ட விதம் அவருக்கு திருப்தியாக இல்லை என கூறப்படுகிறது.

இதனால் வங்கி ஊழியர்களுக்கு தக்க பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார். அதன்படி இரண்டு அழகிகளை வங்கிக்கு அழைத்து வந்துள்ளார்.

வங்கிக்குள் நுழைந்ததும், அனைத்து ஊழியர்களையும் அழைத்து வாடிக்கையளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நான் உங்களுக்கு காட்டுகிறேன் என்று கூறி, மியூசிக்கை ஆன் செய்துள்ளார் அவர்.

பாடல்கள் ஒலிக்க இரண்டு அழகிகளும் நடனம் ஆடியபடியே தாங்கள் அணிந்திருந்த ஆடையை ஒவ்வொன்றாக கழற்றி எறிந்துள்ளனர். மேலும், மேஜை மீது ஏறியும் நடனம் ஆடினர்.

இதை பார்த்த வங்கி ஊழியர்களுக்கு தர்மசங்கடமாகிவிட்டது. பின்னர், வாடிக்கையாளர் ஒருவர் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால், வாடிக்கையாளரின் பெயர் மற்றும் விவரங்களை வெளியிட அந்த வங்கி மறுத்துவிட்டது. வங்கி ஊழியர்கள் மரியாதையாக தன்னை நடத்தவில்லை என்பதற்காக இரண்டு அழகிகளை அழைத்து வந்து நிர்வாண ஆட்டம் போட வைத்தது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*