பூமியில் தோன்றிய இராட்சத கிடங்குகள் உலகத்தின் மரணக்குழிகளா?

பிறப்பு : - இறப்பு :

நாம் வாழும் இந்தப் பூமிப்பந்தில் நிலைத்திருக்கும் அத்தனை உயிர்ச் சக்திகளையும் மீறிய சக்தியொன்று இருப்பதாகவே சமீபத்தில் நிகழ்ந்துவரும் மாற்றங்களும் விஞ்ஞானத் தேடல்களும் நிரூபித்துவருகின்றன.

பூமியின் பெரும்பாலான தரைப் பகுதிகளில் மனிதர்கள் செறிந்து வாழ்ந்தாலும் மனிதர்களுக்குத் தெரியாமலே தரையில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. கடவுள் இருக்கின்றாரா இல்லையா என்ற வாதப் பிரதிவாதங்களின் மத்தியில் மனிதனால் செய்ய முடிந்த விண்வெளிச் சாதனைகளையும் கடந்த சக்தியொன்று பூமியில் உண்டென்பதை விஞ்ஞானமும் ஒத்துக்கொண்டு வருகின்றதுதான்.

பூமியில் சில இடங்களில் தோன்றியிருக்கும் பாரிய கிடங்குகள் பற்றி அறிவீர்களா?

குறிப்பாக அகன்ற ரஷ்ய நாட்டின் பல பகுதிகளிலும் பூமியின் ஏனைய பகுதிகளிலும் காணப்படும் இந்தக் கிடங்குகள் மனிதரால் உருவாக்கப்பட்டனவா; அல்லது வேறு ஏதாவது உயிர்களால் ஏற்படுத்தப்பட்டதா; அன்றியும் பூமியைச் சாராத சக்தியொன்றால் உருவாக்கப்பட்டனவா? என்ற கேள்விக்கு இன்றுவரை விஞ்ஞானிகளால் விடை தேட முடியவில்லை என்பதே உண்மை.

அந்தக் கிடங்குகள் பற்றி நாம் சாதாரணமாகக் கடந்து செல்லமுடியாது என்பதற்கு அடிப்படையாக அமைவது அவற்றின் படுபாதாளத் தோற்றமும் அமைப்பு முறையும்தான். பொதுவாக இவ்வாறான துளைகள் 1980ஆம் ஆண்டு காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டாலும் ஆகப்பிந்திய துளைகள் அண்மைக் காலமான 2014 மற்றும் 2015 காலங்களில் உருவாகியுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் துளைகளை மேலோட்டமாக அவதானித்தால் இவை செயற்கையாக உருவாக்கப்பட்டவை என்றே எண்ணத் தோன்றும், ஆனால் இவற்றின் பிரமாண்டத்தையும் ஆழத்தையும் வைத்து அவதானித்தால் மனிதரால் செய்திருக்கக்கூடிய நடைமுறைச் சாத்தியம் இல்லை என்றே சொல்கின்றனர்.

அப்படி மனிதர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்த இடத்திலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட இராட்சத மண்கும்பம் எங்கே கொண்டு செல்லப்பட்டிருக்கும் என்பதற்கும் விடை இல்லை.

“பூமியில் புதைந்திருந்த ஏதாவது உறங்குநிலைச் சக்தி திடீரென்று வெளிப்பட்டு அவ்விடத்திலிருந்து வெளியேறியிருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது. இன்னொரு சாராரின் சந்தேகத்தின்படி, பூமியிலிருந்து பாரியளவில் தோண்டியெடுக்கப்பட்ட மண், பூமிக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் எனவும் உகிக்கப்படுகிறது.

எது எப்படியோ, மனித சக்தியையும் பூமிசார்ந்த இயற்கைச் சக்தியையும் தாண்டிய சக்தி ஒன்று நமது பூமியைப் பதம்பார்த்துவருகின்றது என்பதை விஞ்ஞானிகளும் தலையில் கை வைத்து யோசிக்கத் தொடங்கிவிட்டனர் என்றுதான் சொல்லமுடியும்!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit