தமிழ்நாட்டில் பரபரப்பு ஈழம் மலரவேண்டும் என்று கடிதம் எழுதிவைத்து தற்கொலை!

பிறப்பு : - இறப்பு :

தமிழ்நாடு திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய தினம் தமிழீழம் மலரவேண்டும் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு தமிழ் உணர்வாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தெற்கு உடையார் பாளையத்தில் வசித்து வந்த சிலோன் சண்முகம் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

“ஈழத்தில் தமிழர் ஆட்சி அமைய வேண்டும்” என தன்னுடைய கடிதத்தில் உருக்கமாக எழுதிய இவர் திருப்பூர் மாவட்டம், முதலிபாளையம் நால்ரோடு அருகில் உள்ள ஓரிடத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் ஒரு இலங்கயைச் சேர்ந்த நபர் என்று குறிப்பிடப்படுகிறது.

சாவதற்கு முன் தனது கைப்பட உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி கையில் வைத்துக் கொண்டே இறந்துள்ளார்.

“கச்சதீவை மீட்க வேண்டும். தமிழீழம் மலர வேண்டும். ஈழத்தில் தமிழர் ஆட்சி அமைய வேண்டும்” என அதில் எழுதப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது சண்முகத்தின் சடலம் திருப்பூர் அரசு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit