சொந்த மண்ணில் தோற்றுப்போன இலங்கை: வரலாறு படைத்தது ஜிம்பாப்வே!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கை அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று வரலாறு படைத்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி, இலங்கை அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதியது.

நான்கு போட்டிகள் முடிவில் தொடர் 2-2 என சமனில் இருந்த நிலையில் இரு அணிகள் மோதும் கடைசி மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டி அம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணித்தலைவர் கிரேம் கிரீமர் முதலில் பந்து வீச தெரிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்கள் எடுத்தது.

அதிகபட்சமாக தனுஷ்க குணாதிலக்க 52 ஓட்டங்களும், அசேல குணரத்ன ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும் எடுத்தனர்.ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராஷா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து, 204 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணி 38வது ஓவரில் 7 விக்கெட் இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.

ஜிம்பாப்வே அணியின் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய Masakadza 73 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அகில தனஞ்சய 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-2 என கைப்பற்றி ஜிம்பாப்வே வரலாறு படைத்தது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*