இந்தியா படுதோல்வி: தோல்விக்கு காரணம் கூறும் கோஹ்லி

பிறப்பு : - இறப்பு :

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் தோற்றதற்கு ஓட்டங்கள் அதிகமாக குவிக்காததே காரணம் என விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதிய டி20 போட்டி நேற்று கிங்ஸ்டன் நகரில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தோல்வி குறித்து இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், ஆரம்பத்தில் நன்றாக விளையாடியதாக கூறியுள்ளார்.

ஆனாலும், யாராவது ஒரு வீரர் 80-90 ஓட்டங்களை எடுத்திருக்க வேண்டும். டி20 போட்டிகளில் இது அவசியம் என நினைப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இதை அடுத்து வந்த வீரர்கள் ஓட்டங்கள் எடுக்க தவறிவிட்டார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் சிறந்த டி20 அணியை கொண்டுள்ளது. டி20 போட்டிகளில் வெற்றியை கணிக்க முடியாது. இருந்தாலும் இந்த தொடரை ரசித்து விளையாடினோம் என விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit