அந்தாட்டிக்காவில் பாரிய வெடிப்பு இராட்சத பனிப்பாறை விலகும் அபாயம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மேற்கு அந்தாட்டிக்கா பனித்தட்டில் இருந்து அமெரிக்காவின் டெலவார் மாநிலம் அளவு மிகப்பெரிய பனித்துண்டு ஒன்று விலகிச் செல்வதற்கு நூலிழையில் தொங்கிக் கொண்டுள்ளது.

லார்சன் சி பனித்தட்டில் இருந்து இந்த பனித்துண்டு உடைபட்டால் அது வரலாற்றில் மிகப்பெரிய பனிப்பாறையாக இருக்கும். இது மொத்தம் 6,600 சதுர கிலோமீற்றர் அளவு கொண்டதாகும்.

இந்த பனிப்பாறை கடலளவில் இருந்து கீழால் 210 மீற்றர்கள் (சுமார் 70 அடி) வரை ஆழம் கொண்டதாகும் என்று ஐரோப்பிய விண்வெளி மையம் குறிப்பிட்டுள்ளது.

“பனித்தட்டின் வெடிப்பு தற்போது சுமார் 200 கீலோமீற்றர்கள் நீண்டுள்ளது. அது பனித்தட்டில் இருந்து விடுபட்டு கடலில் கலப்பதற்கு வெறும் ஐந்து கிலோமீற்றர் பகுதி மாத்திரமே எஞ்சியுள்ளது” என்று ஐரோப்பிய விண்வெளி மையம் எச்சரித்துள்ளது.

இந்த பனிப்பாறை வெடிப்பை கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதானித்து வரும் விஞ்ஞானிகள் அது சில மாதங்களுக்குள் உடைப்பெடுத்து விடும் என்று எதிர்பார்க்கின்றனர். இந்த பனிப்பாறை விலகும் பட்சத்தில் லார்சன் சி பனித்தட்டு தனது 10 வீத பகுதியை இழந்துவிடும்.

இந்த பனிப்பாறை கடல் நீரில் மிதக்கும்போது அது கடல் போக்குவரத்துகளில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த பனிப்பாறை அந்தாட்டிக்கா பெருங்கடலில் சிந்தும்போது கடல் மட்டம் சுமார் 10 சென்டிமீற்றர்கள் (4 அங்குலம்) உயர வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*