சுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2017 (படங்கள்,காணொளி இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

சுவிஸ் பேர்ண்-தொப்பன் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா சனிக்கிழமை காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த தேர்த்திருவிழாவில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் பலர் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர். பாற்குடம், கற்பூரச் சட்டி, காவடி எனப் பக்தர்கள் தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். பூஜை நிகழ்வில் கலந்துகொண்ட பலதரப்பட்ட மக்கள் எல்லாம் வல்ல முருகப்பெருமானின் அருள் ஆசியை பெற்று சென்றனர்.

இந்நிகழ்வில் குறித்த பக்த அடியார் ஒருவர் நூற்றுக்கணக்கில்  ஆணிகள் பதிக்கப்பட்ட காலனியை அணிந்து எம்பெருமானுக்கு நேர்த்திகடனை செய்தமையும் குறிப்பிடத்தக்கது. இவரின் நேர்த்திக்கடன் வருகை தந்திருந்த மக்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணம் அமைந்திருந்தது.

இந்நிகழ்வில் யாழ் பல்கலைகழக விரிவுரையாளர் கந்தையா ஸ்ரீ கணேசன் அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. மற்றும் சிறப்பு விருந்தினர்களின் நேர்காணல்களையும் நீங்கள் கீழிருக்கும் காணொளியில் காணக் கூடியதாக இருக்கும்.

பூஜைகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்று இவ் வைபவம் இனிதே நிறைவேறியது.

“மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”

படங்கள் இங்கே

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit