நாளை நடக்கும் இண்டர்வியூ: இவரா இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகப்போகிறார்?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தெரிவு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ப்ளே விலகினார். அதைத் தொடர்ந்து பயிற்சியாளரை தெரிவு செய்யும் முனைப்பில் பிசிசிஐ இறங்கியது.

புதிய பயிற்சியாளர் பதவிக்கு வீரேந்தர ஷேவாக், டோம் மூடி, ரவிசாஸ்திரி, சிம்மன்ஸ், லேன்ஸ் குளூஸ்னர் உட்பட பலர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் இதற்கான இண்டர்வியூ மும்பையில் நாளை நடக்கிறது. இதில் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகிய 3 பேர் அடங்கிய குழு நேர்காணல் நடத்துகிறது.

இதில் இந்திய அணியின் பயிற்சியாளராக வருவதற்கு ரவி சாஸ்திரிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*