நிம்மதி பெருமூச்சுவிட்ட மெஸ்சி!

பிறப்பு : - இறப்பு :

வரி மோசடிக்காக சிறைத் தண்டனை பெற்ற பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தண்டனை, அபராதமாக மாற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு லியோனல் மெஸ்ஸிக்கு பார்சிலோனா நீதிமன்றம் வழங்கிய 21 மாத தண்டனை, இரண்டு லட்சத்து எண்பத்து எட்டாயிரம் டொலர்கள் அபராதமாக மாற்றப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து அணியான பார்சிலோனா கிளப்பிற்காக மெஸ்சி விளையாடி வருகிறார். அந்த அணியின் முன்னணி வீரராக திகழும் மெஸ்சி மீது ஸ்பெயின் நாட்டில் வரி ஏய்ப்பு வழக்கு தொடரப்பட்டது.

அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் 21 மாத சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் மெஸ்சியின் கால்பந்து விளையாட்டு கேள்விக்குறியானது.

இந்த நிலையில், பார்சிலோனா அணியும், அர்ஜென்டினா கால்பந்து பெடரேசனும் தண்டனைக்குப் பதிலாக அபராதம் விதிக்கலாம் என யோசனை கூறியது.

இந்த யோசனைக்கு அரசு வழக்கறிஞர் சம்மதம் தெரிவித்ததோடு, நீதிமன்றத்தில் இந்த தகவலையும் தெரிவித்தார். இந்நிலையில் நீதிமன்றம் அவரது தண்டனைக் காலத்தை அபராதமாக மாற்றியுள்ளது.

இதனால் மெஸ்சி சிறைத்தண்டையில் இருந்து தப்பியுள்ளார். மெஸ்சி மற்றும் அவரது தந்தை மீது சுமார் 4.1 மில்லியன் யூரோ அளவிற்கு வரிஏய்ப்பு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit